காதலனுடன் இருந்ததை பார்த்த தம்பியை உயிருடன் எரித்த அக்கா !

0 minute read
உ.பி.யில் புலன்சாகர் பகுதியில் வசிக்கும் இளம்பெண் ஒருவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. 
காதலனுடன் இருந்ததை பார்த்த தம்பியை உயிருடன் எரித்த அக்கா !
பெற்றோர்கள் வீட்டில் இல்லாத சமயத்தில் கள்ளக் காதலனை அப்பெண் தனது வீட்டிற்கு அழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது வெளியே சென்றிருந்த அப்பெண்ணின் தம்பி லலித்(12) திடீரென வீட்டுக்கு வந்துள்ளான்.

மேலும் அவர்கள் ஒன்றாக இருந்ததையும் பார்த்து விட்டான். இதனை அறிந்த அவர்கள், இந்த வி‌ஷயத்தை சிறுவன் பெற்றோரிடம் சொல்லி விடுவான் என பயந்து அவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தனர். 

இதனை யடுத்து அவனுடைய கை கால்களை கட்டி உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து எரித்து அந்த இடத்தில் இருந்து தப்பியோடி விட்டனர். 

இதில் உடல் கருகி அந்த இடத்திலேயே சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
Tags:
Today | 10, April 2025
Privacy and cookie settings