சிவகார்த்திகேயன் எண்ணம் பாராட்டுக்குரியது.. ஷங்கர் !

அடுத்தக் கட்டத்துக்குப் போக வேண்டும் என்ற சிவ கார்த்திகேயனின் எண்ணம் வரவேற்கத்தக்கது என்று இயக்குநர் ஷங்கர் புகழாரம் சூட்டினார். 
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ரெமோ'. 

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத் திருக்கிறார். ராஜா பெரும் பொருட் செலவில் தயாரித் திருக்கிறார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் முதல் பாடல் ஆகியவற்றை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டார். 

மேலும், 24 ஏ.எம் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு என்பதால் ஏ.வி.எம்.சரவணன் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இவ்விழா ரொம்ப ஈர்க்கு மளவுக்கு இருந்தது. 

இந்த விழாவைப் பார்த்தவுடன் 2.0 இசை வெளியீட்டு விழாவை எப்படி பண்ணலாம் என்ற ஐடியா எல்லாம் வந்திருக்கிறது. 

'ரெமோ' ரொம்ப ஈர்க்கக்கூடிய ஒரு படம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைத்து வகையிலும் ரொம்ப கவனம் செலுத்தி யிருக்கிறார்கள்.
'ரஜினி முருகன்' பார்த்தேன். படத்துக்கு படம் ரொம்ப பெரிய நடிகராக வளர்ந்து வருகிறார் சிவ கார்த்திகேயன் என உணர்ந்தேன். அவர் அப்படியே 5 முதல் 10 வருடங்கள் பண்ணி யிருக்கலாம். 

ஆனால், இந்த தருணத்திலேயே மேக்கப் எல்லாம் போட்டு, அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்ற அவருடைய எண்ணம் வரவேற்கத் தக்கது. கண்டிப்பாக அவர் அடுத்த கட்டத்துக்குப் போவார். 

அந்த படத்துக்கு இன்னொரு மிகப்பெரிய ப்ளஸ் கீர்த்தி சுரேஷ். லிங்குசாமி அந்த தருணத்தில் போன் நம்பர் கொடுத்தார். 

எனக்கு பேச சந்தர்ப்பம் அமைய வில்லை. இன்னும் பெரிய இடத்துக்கு அவர் போக வேண்டும்.

அனிருத்தை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் ஆச்சர்யமாக இருக்கும். 'மான் கராத்தே' தருணத்தில் சந்திக்கும் போது கர்நாடக சங்கீதம் கற்று வருவதாகச் சொன்னார். 

இப்போது ரொம்ப பிஸியா என்று கேட்டேன். இல்ல சார்.. பிஸி எல்லாம் இல்லை என்றார் அனிருத். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 
படங்கள் எல்லாம் குறைத்து விட்டேன். மிஷின் மாதிரி கொடுக்க வேண்டும் என்ற கட்டாயம் வந்து விட்டது.

முன்பைப் போல் என்னால் சந்தோஷமாக பணியாற்ற முடியவில்லை. அதனால் படங்களைக் குறைத்து விட்டேன் என்றார். அது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். 

இப்போதே பெரிய இடத்தில் இருக்கிறார். இன்னும் பெரிய இடத்திற்கு வருவார்.

பி.சி.சார், ரெசூல் பூக்குட்டி, அனல் அரசு, கமலகண்ணன் என பெரிய தொழில் நுட்பக் கலைஞர்கள் இருக்கிறார்கள். படத்திற்கான மெனக்கிடல் தெரிகிறது. 
கண்டிப்பாக இப்படம் பெரியளவில் வெற்றி பெறும் என நம்புகிறேன். இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் மற்றும் தயாரிப்பாளர் ராஜாவையும் நான் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்தார் இயக்குநர் ஷங்கர்.
Tags:
Privacy and cookie settings