முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்தில் கல்யாண வேலைகள் படு மும்முரமாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இளவரசி மகனும் ஜாஸ் சினிமா நிர்வாக இயக்குநருமான விவேக்கின் நாளைய திருமணத்துக்குத் தான் இத்தனை பரபரப்பு....
முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் என கல்யாண பத்திரிகை அச்சடிக்கப் பட்டிருந்தது. இந்த பத்திரிகையில் இளவரசி, திவாகரன், மகாதேவன், வெங்கடேஷ்,
இளவரசி மருமகன்கள் கார்த்திகேயன், ராஜராஜன் மற்றும் ஜெயானந்த் என ஒட்டு மொத்த மன்னார்குடி வகையறா குடும்ப பெயர்களும் இடம் பெற்றிருந்தன.
ஆனால் ஆச்சரியப்படும் படி இளவரசி வீட்டு திருமணத்தில் 'நாத்தனார்' சசிகலாவின் பெயர் மட்டும் இதில் இடம் பெறவில்லை.
இந்த திருமண ஏற்பாடுகளை சசிகலாவின் சகோதரர் திவாகரன் தான் முன்னின்று ஏற்பாடு செய்தவர்.
சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், ஜெயலலிதாவின் ஹைதராபாத் திராட்சை தோட்டத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
அப்போது இளவரசியை போயஸ் கார்டனுக்கு அழைத்து வந்தவர் சசிகலா. ஆனால் ஒரு கட்டத்தில் சசிகலாவை மீறி அதிகார மையமாக இளவரசி உருவெடுத்தார்.
சசிகலாவின் ஒட்டு மொத்த குடும்பமே அதிமுகவில் அதிகாரம் செலுத்திய காலம் உண்டு...
ஆனால் மெல்ல மெல்ல அந்த சாம்ராஜ்யம் சரிந்து போக இப்போது இளவரசியின் குடும்பத்தின் கைதான் போயஸ் கார்டனிலும் அதிமுகவில் ஓங்கி வருகிறது.
தற்போது இளவரசியின் வீட்டு கல்யாண பத்திரிகையில் சசிகலாவின் பெயரே இல்லாததால் அவர் ஒட்டு மொத்தமாக ஓரம் கட்டு விட்டப் பட்டாரா? என விவாதிக்கின்றனர் அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள்.
Tags: