இருட்டில் புகைப்படம் எடுக்கும் ஸ்மார்ட்போன் !

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இருட்டிலும் புகைப்படம் எடுக்கும் வகையிலான நைட்விஷன் கேமிரா வசதி கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தி யுள்ளது.
இருட்டில் புகைப்படம் எடுக்கும் ஸ்மார்ட்போன் !
டென்மார்க்கைச் சேர்ந்த லூமிகான் நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள டி3 வகை ஸ்மார்ட்போன்கள், உலகின் முதல் நைட்விஷன் கேமிரா வசதியுடன் அறிமுகப் படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் என்ற பெருமை பெற்றுள்ளது.

இந்த வகை ஸ்மார்ட்போன்களில் ஐஆர் எனப்படும் அகச்சிவப்பு கதிர்கள் மூலம் இயங்கும் பிளாஷ் உடன் கூடிய 4 மெகாபிக்சல் நைட்விஷன் கேமிராவைக் கொண்டுள்ளது. 

இந்தவகைக் கேமிராக்கள் மூலம் கும்மிருட்டிலும் புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும், 3 ஜிபி ரேம், 4.8 இன்ச் தொடு திரையும், 128 ஜிபி நினைவக வசதியும் கொண்டதாக அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமிரா 13 மெகாபிக்சல் கொண்டதாகவும், முன்பக்கக் கேமிரா 5 மெகாபிக்சல் கொண்டதாகவும் உருவாக்கப் பட்டுள்ளது. 
அதே போல, 360 டிகிரி பிங்கர் சென்சார் வசதியுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் தண்ணீர் மற்றும் தூசுக்களால் பாதிக்கப்படாத வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப் பட்டுள்ளது. 

ஐரோப்பிய சந்தையில் 925 அமெரிக்க டாலர்கள் விலையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள இது, இந்தியாவில் ரூ.62 ஆயிரத்துக்கு மேல் விற்பனை செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings