ஸ்மார்ட்போன் உலகில், இப்போது ஒளிப்படங்கள் சார்ந்த செயலிகள் தான் அடுத்தடுத்து அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. இந்த வரிசையில்
இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐபோன்களுக்கான ஒளிப்படச் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
‘பிக்ஸ்' எனும் பெயரிலான இந்தச் செயலியில் வழக்கமாக கேமரா சார்ந்த செயலிகளில் பார்க்கக் கூடிய செட்டிங் வசதி போன்ற அம்சங்கள் எல்லாம் கிடையாது.
மிக எளிமையாக, ஆனால் மிகச் சிறந்த முறையில் ஒளிப்படம் எடுக்க உதவும் வகையில் இந்தச் செயலி உருவாக்கப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதற்குக் காரணம், இந்தச் செயலி ‘ஆர்டிஃபீஷியல் இன்டெலிஜென்ஸ்' எனப்படும் செயற்கை அறிவு முறையில் செயல்படுவது தான்.