பாலம் திடீரென கீழ் இறங்கியது திருபுவனத்தில் பரபரப்பு !

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தொகுதி திருபுவனம் மற்றும் வேப்பத்தூர் ஆகிய பேரூராட்சி பகுதிகளை இணைக்கும் வகையில் 
பாலம் திடீரென கீழ் இறங்கியது திருபுவனத்தில் பரபரப்பு !
காவிரியில் இருந்து பிரிந்து வரும் வீரசோழன் ஆற்றின் குறுக்கே 60 ஆண்டுகளுக்கு முன் பாலம் கட்டப்பட்டது. 

இந்த பாலம் இருசக்கர வாகனம் மற்றும் நடைபாதைக்கு மட்டும் பயன்படும் வகையில் கட்டப்பட்டது. தினமும் இந்த பாலத்தின் வழியாக ஏராளமானோர் சென்று வருகின்றனர். 

சில ஆண்டுகள் முன்பு பாலத்தின் வடபகுதி திடீரென கீழ் இறங்கியது. பாலத்தை சீரமைக்க வேண்டுமென கோரி மக்கள் போராட்டம் நடத்தினர். 

ஓராண்டுக்குப் பிறகு பாலம் சீரமைக்கப் பட்டது. ஆடிப்பெருக்கு விழாவையொட்டி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. 

இதனால் ஆற்றுக்கு ஏராளமான மக்கள் வந்தனர். நேற்று மதியம் திடீரென பாலத்தின் தென்பகுதி கீழ் இறங்கியது.
பாலத்தை தாங்கிய இரும்புதூண்கள் மண் அரிப்பால் கீழிறங்கி சாய்ந்தது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

தாசில்தார் ராமலிங்கம், வட்டார வளர்ச்சி அலுவலர் சூரியராமன், வருவாய் ஆய்வாளர் திப்புசுல்தான் உள்ளிட்டோர் வந்து பாலத்தை பார்வையிட்டனர். 

பின்னர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் இரு வழியிலும் கயிறுகளை கட்டி போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

பாதுகாப்பிற்காக திருவிடைமருதூர் போலீசார் மற்றும் கிராம உதவியாளர்கள் நிறுத்தப் பட்டனர்.
பாலம் உள்வாங்கியது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், மணல் திருடும் மாட்டு வண்டி மற்றும் வாகனங்களை நாங்கள் மறிக்கும்போது எங்களை தாக்கி விடுகின்றனர். 

இது தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் புகார் தெரிவித்தாலும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

மணல் திருட்டு நடைபெறுவதால் தான் பாலம் கீழ் இறங்கியது. இந்த பாலத்தை உடனே சீரமைக்க வேண்டும். 

அத்துடன் இந்த பகுதியில் புதிய பாலமும் அமைத்து தருவதுடன் பாலத்தின் அருேக மணல் அள்ளக்கூடாது என்பதை உறுதியாக அமல்படுத்த வேண்டும்’ என்றார்.
Tags:
Privacy and cookie settings