பிறந்த நாளன்று விஜயகாந்த் செய்த ஒரு சூப்பர் மரியாதை !

1 minute read
பிறந்த நாளன்று வரும் பூங்கொத்துகளை எத்தனை பேர் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள் என தெரியாது... 
பிறந்த நாளன்று விஜயகாந்த் செய்த ஒரு சூப்பர் மரியாதை !

அதுவும் அரசியல் தலைவர்களுக்கு மலை மலையாய் வந்து குவியும் பூங்கொத்து களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். 


ஆனால் கடந்த 25-ந் தேதியன்று 65-வது பிறந்த நாள் கொண்டாடிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த பூங்கொத்து களுக்கு மரியாதை செய்த விதம் தான் மலைக்க வைத்துள்ளது. 

விஜயகாந்த் பிறந்த நாளன்று மக்கள் நலக் கூட்டணி தலைவர் வைகோ தலைமையில் படைதிரண்டு போய் பீனிக்ஸ் கேக் ஊட்டி வாழ்த்தினர்.

விஜயகாந்தும் தம் பங்குக்கு வைகோ உள்ளிட்ட தலைவர்களுக்கு கேக் ஊட்டி நெகிழ்ந்து மகிழ்ந்து போனார். 

இதற்கு திருஷ்டி வைக்கும் வகையில் தொண்டர் ஒருவரை சரமாரியாக விஜயகாந்த் தாக்கிய சம்பவமும் அன்றே நடைபெற்றது. 


இதன் பின்னர் இன்று தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு படத்தை வெளியிட்டுள்ளார் விஜயகாந்த். 

அதில் பிறந்த நாளன்று வந்த பூங்கொத்துகளை வரிசையாக அடுக்கி விதம் விதமான புன்னகை களுடன் போஸ் கொடுத்து போட்டோ எடுத்து,"

எனது பிறந்தநாளை முன்னிட்டு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், நலம் விரும்பிகள் அன்பாக அளித்த பூங்கொத்துக்களுடன்... என பதிவிட்டுள்ளார். 


விஜயகாந்தின் இந்த போட்டோ அவரது கட்சி தொண்டர்களை உற்சாகப் படுத்தி யிருக்கிறது...
Tags:
Today | 9, April 2025
Privacy and cookie settings