எந்த ஒரு செயலும், நடிகர்கள் செய்தாலோ, விளையாட்டு நட்ச்சத்திரங்கள் செய்தாலோ தான் அது பெரிதாக கவரப்படுகிறது. ஏன், விருதுகள் கூட ஊடகத்தின் வெளிச்சத்தில் இருக்கும் இவர்கள் வென்றால் தான் அது பெரிய செய்தி ஆகிறது, மக்கள் அனைவருக்கும் தெரிகிறது.
இதுவே, வேறு துறையை சேர்ந்தவர்கள் பெரும் புகழ் பெற்றாலும், சாதனை புரிந்தாலும், கவுரவிக்கப் பட்டலும் கூட அது துணுக்கு செய்தியாகவோ, துண்டு செய்தியாகவோ மறைந்து விடும். இது செவாலியே விருதுக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல.
நடிகர் கமல் ஹாசனுக்கு முன்னரே 7 தமிழர்கள் செவாலியே விருது பெற்றுள்ளனர்...
அஞ்சலி கோபாலன்
திருநங்கைகள் நல்வாழ்வுக் காகவும், எய்ட்ஸ் நோயாளிகளின் மறு வாழ்வுக்காகவும் அவர் ஆற்றி வரும் தொண்டுக்காக. அக்டோபர் 25, 2013 இல் செவாலியர் விருது பெற்ற முதல் இந்திய தமிழ் பெண் அஞ்சலி கோபாலன்.
மதன கல்யாணி
புதுச்சேரி பிரெஞ்சு கல்லூரியில் 41 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் மதன கல்யாணி. இவர் தமிழ் மற்றும் பிரெஞ்சு இரு மொழிகளிலும் புலமை பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இவர் 20-க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவரது பணிகளை பாராட்டி இவருக்கு செலாவியே விருது வழங்கப்பட்டது.
சிவா இராமநாதன்
சிவா இராமநாதன், இவரது இயற்பெயர் சிவயோகநாயகி. பிரான்சு நாட்டின் செவாலியர் விருது பெற்ற முதல் யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண். இவர் ஒரு ஆசிரியர்.
சிவாஜி கணேஷன்
நடிகர் திலகம் சிவாஜி கணேஷன்-க்கு கடந்த 1995-ம் ஆண்டு செவாலியே விருது வழங்கப்பட்டது. இந்த விருதை பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
ஷெரீன் சேவியர்
மனித உரிமைசார் பணிகளுக்காக இவருக்கு செவாலியே விருது வழங்கப்பட்டுள்ளது.
நாகநாதன் வேலுப்பிள்ளை
நாகநாதன் வேலுப்பிள்ளை, ஈழத்து, மற்றும் பிரெஞ்சு எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்களம், இந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர்.
23 ஆண்டுகளுக்கு மேலாக பிரெஞ்சு அரசாங்க சேவையில், மும்பையில் அமைந்த தூதரக அலுவலகத்தில் வர்த்தக சேவையில் சட்ட ஆலோசகராக பணிபுரிந்தவர்.
நடிகர் அலக்ஸ்!
குணசித்திர நடிகர் அலக்ஸ்-க்கு கடந்த 2010-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்லுள்ள அபுதாபியில் செவாலியே விருது வழங்கியதாக பிரபல தமிழ் செய்தி இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால், இது பிரான்ஸ் நாடு வழங்கும் செவாலியே விருதா என்பது அறியப் படவில்லை.