இடி விழுந்தது போல் இருக்கிறது? தங்கர் பச்சான் !

படைப்பாளிகள் என்றென்றும் பாவப்பட்டவர்கள். 1500 பாடல்கள் எழுதி யிருக்கிறார் நா. முத்துக்குமார். ஆனால் அப்பா என்று கூட சொல்லத் தெரியாத பச்சைக் குழந்தையை வைத்துக் கொண்டு
இடி விழுந்தது போல் இருக்கிறது? தங்கர் பச்சான் !
நான் என்ன செய்யப் போகிறேன் என்று அவரது மனைவி கதறி அழுகிறார். இங்கே அதற்கு என்ன பதில் இருக்கிறது என்று இயக்குநர் தங்கர் பச்சான் வேதனையுடன் கேட்டுள்ளார்.

உடல் நலனைப் பற்றி கொஞ்சம் கவலைப்படாமல் இருந்து வந்தார் நா. முத்துக்குமார். 

தூக்கத்தைத் தொலைத்து விட்டு உழைத்து வந்த அவர் இப்போது மொத்தமாக தூங்கப் போய் விட்டார் என்றும் அவர் வேதனைப் பட்டுள்ளார். தலையில் இடி விழுந்தது போல் என்று சொல்வார்களே, அது இது தானா?. 

கல்லூரியில் படிக்கிறான் எனச்சொல்லி முத்துக்குமாரை அவனது அப்பா தான் 1993-ம் ஆண்டில் எனது வெள்ளைமாடு நூல் வெளியீட்டு விழாவில் அறிமுகப்படுத்தினார்.

24 மணி நேரமும் எழுத்து, சிந்தனை, புத்தகம் என்றே அலைந்தவன். என்னை உரிமையுடன் கண்டிப்பவனும், இறுதி வரை எனக்கு உண்மையாய் இருந்தவனும் தம்பி தான்.
அவனிடம் நான் அன்பு காட்டியதை விட அதிகமாக திட்ட மட்டுமே செய்திருக்கிறேன். ஓய்வற்ற அவனது உழைப்பு அவனை எங்கே கொண்டு போய்விடும் என்பதையும் எச்சரித்திருக்கிறேன். 

அவன் உடல் நலத்தைப் பற்றி என்னை விட கவலைப் பட்டவர்கள் யாராவது இருப்பார்களா எனத் தெரியவில்லை. தூங்காத தூக்கத்தை எல்லாம் சேர்த்து மொத்தமாக தூங்கப் போய் விட்டான் என் முத்து.

அவனது பாடல்களும், கவிதைகளும், எழுத்துகளும் மட்டுமே நமக்கு தெரியும். எல்லோரும் சேர்ந்து மொத்தமாக நேற்றோடு புகழ்ந்து முடித்து விட்டோம். 

அப்பா என்று கூட இன்னும் சொல்ல வராத இந்த குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறேன் 

அண்ணா என என்னைப் பிடித்துக் கொண்டு கதறிய முத்துக்குமார் மனைவியின் குரலுக்கு இங்கே என்ன பதில் இருக்கிறது?. நான் இருக்கிறேன் என்றுதான் என்னால் சொல்ல முடிந்தது.
மீண்டும், முத்துக் குமாரைப் போல் அவனது இளந்தளிர்களும் இந்த போலியான உலகத்தில் போராடி கரைசேர வேண்டும்.

அவன் 1,500 பாடல்கள் எழுதி என்ன சம்பாதித் தான் என எனக்குத் தான் தெரியும். சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் விட்டுக் கொடுக்காத முத்துக் குமாருக்கு பெரும் பொருளாக அது சேரவே யில்லை. 

நினைத்தாலே நெஞ்சு பதறுகிறது. பணமில்லாமல் எதுவும் நடக்காத இந்த நாட்டில் இந்த கவிஞனின் பிள்ளைகளும் அவன் போன்ற பண்புள்ள, சிறந்த மனிதாக வாழ்ந்து காட்டத் தான் வேண்டும்.
இடி விழுந்தது போல் இருக்கிறது? தங்கர் பச்சான் !
இனி முத்துக்குமாரின் குடும்பத்தை காப்பாற்ற யார் இருக்கிறார்கள்?. தமிழ் சினிமாவில் ஒரு படத்திற்கு ஒரு பெரிய கதாநாயகனுக்கு தரப்படுகிற சம்பளத்தில் பதினைந்தில் ஒரு பகுதியைத் தான் 

இந்த 15 ஆண்டுகள் முழுக்க இரவு பகலாக கண்விழித்து சம்பாதித்தான். படைப்பாளிகள் எப்போதுமே பாவப்பட்டவர்கள் தான்.

எண்ணற்ற எத்தனையோ படைப்பாளிகளைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு சிறிதும் குற்றவுணர்ச்சி இல்லாமல் அவர்களுக்கு ஆண்டுக்கு ஆண்டு 

நினைவு நாளில் மட்டும் பணம் கொடுத்து பத்திரிகைகளில் விளம்பரம் செய்து கொண்டு சிலைக்கு மாலை போட்டுக் கொண்டிருக்கிறோம்.
இவர்கள் தான் தமிழர்கள். இதுதான் தமிழ் பண்பாடு. முத்துக் குமாருக்கு இப்போது புரியும். தனக்கு உடல் முக்கியம், மனைவிக்கு கணவன் முக்கியம், 

தன் செல்வங்களுக்கு தந்தை முக்கியம், குடும்பத்துக்கு தலைவன் முக்கியம் என்பது என்று உருக்கமாக வேதனையை வெளிப்படுத்தி யுள்ளார் தங்கர் பச்சான்.
Tags:
Privacy and cookie settings