திருப்பதி பிரசாதம் லட்டு எப்படி உருவானது?

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதம் உலக பிரசித்தி பெற்றது. இந்த லட்டு பிரசாத விநியோகம் தற்போது 76-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.
திருப்பதி பிரசாதம் லட்டு எப்படி உருவானது?
ஏழுமலையானின் அதிவிருப்ப பிரசாதமான இந்த லட்டு குறித்த சில இனிய தகவல்கள். 

பல்லவர்கள் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதம் விநியோகிக்கும் முறை முதன் முறையாக அமல்படுத்தப் பட்டதாக கல் வெட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேபோல், 2-ம் தேவராயுலு அரசர் காலத்தி லும் பல வகையான பிரசாதங் கள் பக்தர்களுக்காக விநி யோகிக்கப்பட்டன.

இக்காலத்தில் அமைச்சராக இருந்த சேகர மல்லண்ணா என்பவர் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குவதற் கென்றே தனியாக பல தானங்களை செய்துள்ளார்.

பல மைல் தூரத்தில் இருந்து திருமலைக்கு தரிசனத் திற்காக வரும் பக்தர்களுக்கு அன்னதானத்துக்கு பதிலாக பிரசாதங்களே விநியோகிக் கப்பட்டன. 

இந்த பிரசாதங்கள் ‘திருபொங்கம்’ என அழைக் கப்பட்டது. இக்காலகட்டத்தில் பக்தர்களுக்கு வெல்ல பணியாரம், அப்பம், வடை, அதிரசம் என்று ‘மனோஹரபடி’ எனும் பெயரில் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. 
இதில் வடை தவிர மற்ற பிரசாதங்கள் அதிக நாட்கள் தாக்கு பிடிக்காமல் விரைவில் கெட்டு விடும் தன்மையில் இருந்தன. இதனால் வடை பிரசாதத்திற்கு அதிக மவுசு இருந்தது. 

இதை கவனித்த அப்போதைய மதராஸ் அரசு, 1803-லிருந்து பிரசாதங்களை பக்தர்களுக்கு விற்கும் முறையை தொடங்கியது. 

அதன் பிறகே இனிப்பு பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 முதல் பூந்தி லட்டு பிரசாதமாக உருமாறியது.

லட்டு பிரசாதத்தின் அளவு

லட்டு பிரசாதம் தயாரிக்கும் அளவை ‘திட்டம்’ என அழைக்கின்றனர். லட்டு தயாரிக்க பயன்படும் 51 பொருட்களை ஒரு ‘படி’ என்கின்றனர். இதன் மூலம் ஒரு படிக்கு 5,100 லட்டுகள் தயாரிக்கலாம். 

ஒரு படிக்கு பசு நெய் 185 கிலோ, கடலை மாவு 200 கிலோ, சர்க்கரை 400 கிலோ, முந்திரி 35 கிலோ, உலர்ந்த திராட்சை 17.5 கிலோ, கற்கண்டு 10 கிலோ, ஏலக்காய் 5 கிலோ உபயோகப் படுத்தப் படுகிறது.
அதாவது, 5,100 லட்டு தயாரிக்க 852கிலோ எடையுள்ள பொருட்கள் உபயோகப் படுத்தப் படுகிறது. லட்டு பிரசாதங்கள் ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என 3 வகையாக தயாராகின்றன. 

இதில் ஆஸ்தான லட்டு முக்கிய விழா நாட்களில் மட்டுமே தயாரிக்கப்பட்டு பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது.

கல்யாண உற்சவ லட்டு 750 கிராம் எடை கொண்டது. ரூ. 100க்கு இந்த லட்டுகள் கிடைக்கின்றன. தவிர கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்கும் பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

அடுத்ததாக, புரோக்தம் லட்டு. இது 175கிராம் எடை கொண்டது. இந்த வகை லட்டுகள் தான் ரூ.25க்கு பக்தர்களுக்கு விற்கப்படுகிறது.

தாய் ருசி பார்த்த பிறகே

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலின் ஆக்னேய மூலையில் ‘போட்டு’ எனப்படும் பிரசாதங்கள் தயாரிக்கும் இடம் உள்ளது. இங்கு தான் அனைத்து பிரசாதங்களும் தயாரிக்கப் படுகிறது. 
இவை தயாரிக்கப்பட்ட பின்னர், ஏழு மலையானின் தாயாரான வகுல மாதாவிற்கு முதலில் படைக்கப் படுகிறது. அதன் பின்னரே மூலவருக்கு நைவேத்தியங்கள் படைக்கப்  படுகின்றன.

1940-களில் விநியோகம் செய்யப்பட்ட லட்டு பிரசாதங்கள் கல்யாண உற்சவ லட்டு போன்று பெரிய அளவில் இருந்தன. அந்த காலகட்டத்தில் இவை 8 அணாவிற்கு விற்கப்பட்டன. 

பின்னர் இவை படிப்படியாக விலை உயர்த்தப்பட்டு இன்று ரூ.25க்கு பக்தர்கள் கைகளில் மகாபிரசாதமாக கிடைக்கிறது. 

விலை உயர்ந்தாலும் தரம் உயராமல் குறைந்து கொண்டு வருவது பக்தர்களிடையே மன வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. 

நவீன கால எரிவாயு அடுப்பில் பிரசாதங்கள் தயாரிக்கப் படுவதே ருசியும், தரமும் குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது.
எது எப்படி இருப்பினும், லட்டு பிரசாதத்துக்கு இருக்கும் மவுசு இன்று வரையிலும் குறையவில்லை. இதன் காரண மாகவே கடந்த 2009-ல் திருப்பதி லட்டுக்கு புவிசார் குறியீடு பெறப் பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:
Privacy and cookie settings