அமெரிக்காவில் கூகுள் பெண் பணியாளருக்கு நேர்ந்த விபரீதம் !

கூகுள் நிறுவனத்தில் கணக்கு மேலாளராக பணியாற்றிய பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அமெரிக்காவில் கூகுள் பெண் பணியாளருக்கு நேர்ந்த விபரீதம் !
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கணக்கு மேலாளராக Vanessa Marcotte (27) என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவர் தனது தாயுடன் Princeton என்ற கிராமப்புற பகுதியில் வசித்து வருகிறார். 

இந்நிலையில், சம்பவம் நடைபெற்ற அன்று மதிய வேளையின் போது தனது வீட்டிலிருந்து நடந்து சென்ற இவர் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

மகளின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு பார்த்த போது, எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தால் பதற்றம் அடைந்த தாயார், பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொலிசார் மார்கோட்டினை தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவளது வீட்டிலிருந்து 

சுமார் 1/2 கிலோ மீற்றர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் எரிக்கப்பட்ட நிலையில் உடல் ஒன்று கிடந்துள்ளது.

விசாரணையில் அது மார்கோட்டின் உடல் தான் என தெரியவந்துள்ளது. பலாத்காரம் செய்யப்பட்ட மார்கோட் எரித்து கொலை செய்யப் பட்டுள்ளார். 

இதில் அவரது தலை, கால் ஆகிய பாகங்கள் மட்டும் எரிந்துள்ளன என பிரேத பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

தற்போது இக்குற்ற செயலில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

கிராமப் புறமான Princeton - இல் 3,500 மக்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இதனால் இங்கு குற்றங்கள் அதிகம் நடைபெற வாய்ப்புள்ளது.
மார்கோட்டின் இறப்பு குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மார்கோட்டின் இறப்பால் வாடும் 

அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அலுவகத்தில் தனது பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மார்கோட், அனைவரிடமும் அன்பாக பழகும் குணம் கொண்டவள்.

மார்கோட்டின் இறப்பு எங்களை பேரதிர்ச்சிக் குள்ளாக்கி யுள்ளது என தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings