வேலூரில் தண்ணீரில் சடலத்தை எடுத்து சென்ற அவலம் !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் உள்பட சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி வழிகிறது.
வேலூரில் தண்ணீரில் சடலத்தை எடுத்து சென்ற அவலம் !
இந்த தண்ணீர் குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி ஏரிக்கால்வாய் வழியாக குடியாத்தம் பெரிய ஏரிக்கு கடந்த 6 நாட்களாக செல்கிறது.

இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் சடலத்தை இக்கால்வாயை கடந்து மற்றொரு புறத்தில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து செல்ல வேண்டும்.

இந்நிலையில் சேம்பள்ளி எம்ஜிஆர் நகரை சேர்ந்த அம்சா (70) மற்றும் சாந்தாம்மா (29) ஆகியோர் நேற்று இயற்கை மரணம் அடைந்தனர். 

இவர்களின் இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது. ஆனால் வழியில் உள்ள கால்வாயில் தண்ணீர் செல்வதால் சடலத்தை எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர், கால்வாய் மீது பாலம் கட்டித்தர வேண்டும் எனக்கூறி சேம்பள்ளி பஸ் நிறுத்தம் அருகே சடலத்தை சாலையில் வைத்து திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் மதியரசன் மற்றும் போலீசார், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து பாலம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். 

இதனை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள் சுமார் 40 நிமிடத்திற்கு பின் சாலை மறியலை கைவிட்டு கால்வாயில் கழுத்தளவு தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்துச் சென்று சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். 

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:
Privacy and cookie settings