தொடர்ந்து மூன்று ஒலிம்பிக்கில் மூன்று ஓட்டப்பிரிவிலும் தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் ஜமைக்காவின் போல்ட்.
பிரேசிலில் 31வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் 100 மற்றும் 200 மீ., ஓட்டத்தில் 'மின்னல் வேக மனிதன்' ஜமைக்காவின் போல்ட் தங்கம் வென்றார்.
இந்த உற்சாகத்தில் 4*100 மீ., தொடர் ஓட்ட பைனலில் போல்ட், யோகன் பிளேக், பாவெல், நிக்கல் அடங்கிய ஜமைக்கா அணி பங்கேற்றது.
இதில் சீறிப்பாய்ந்த ஜமைக்கா அணி பந்தய துாரத்தை 37.27 வினாடியில் கடந்து தங்கம் வென்றது. வெள்ளி, வெண்கலம் முறையே ஜப்பான், கனடா அணிகள் கைப்பற்றின.
'டிரிபிள் டிரிபிள்':
* இதன் மூலம், ரியோ ஒலிம்பிக்கில் தனது மூன்றாவது தங்கத்தை போல்ட் கைப்பற்றினார்.
தவிர, 100, 200, 4*100 மீ., என மூன்று பிரிவிலும் மூன்று ஒலிம்பிக்கிலும் (பீஜீங்-2008, லண்டன்-2012, ரியோ-2016) தங்கம் வென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார்.
இது, ஒட்டுமொத்த ஒலிம்பிக் அரங்கில் போல்ட் வெல்லும் 9வது தங்கமாக அமைந்தது.