நடுரோட்டில் முத்தம் கொடுக்க முயற்சி !

சேலம் மாவட்டத்தில் காதலிக்கும் படி நபர் ஒருவர் வற்புறுத்தியதோடு மட்டுமல்லாமல் நடுரோட்டில் வைத்து முத்தம் கொடுக்க முயற்சித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
நடுரோட்டில் முத்தம் கொடுக்க முயற்சி !
தாரமங்கலம் பகுதியை சேர்ந்த ராணி என்ற மாணவி, அங்கிருக்கும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவரை சந்தீப் (22) என்ற நபர் ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். 

மேலும் தன்னை காதலிக்குமாறும் வற்புறுத்தி வந்துள்ளார். ராணி பள்ளிக்கு செல்கையில் தினமும், அவரை வழிமறுத்து என்னை திருமணம் செய்துகொள் என வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடைபெற்ற அன்று ராணியை வழி மறித்து மிரட்டியுள்ளார். ஆனால் அதற்கு ராணி மறுத்து விட்டு விலகி செல்லவே, அவரை வழி மறித்து முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ராணி, தனது வீட்டிற்கு சென்று பாட்டியிடம் கூறி கதறி அழுதுள்ளார். 

மறுநாள் (5 ஆம் திகதி) வீட்டில் இருந்த குருணை மருந்தை எடுத்து குடித்த ராணி, வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.
உறவினர்கள், உடனடியாக அவரை தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். மேலும், இந்த காதல் விவகாரத்தால் தான் ராணி இவ்வாறு செய்து கொண்டார் 

என பொலிசில் புகார் அளித்துள்ளனர். புகாரின்படி தாரமங்கலம் பொலிசார் வழக்குப் பதிந்து சந்தீப்பை, போக்ஸோ சட்டத்தில் (பாலியல் குற்ற தடுப்பு சட்டம்) கைது செய்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings