நடிகர் சூரி தனது 39வது பிறந்த நாளை உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படப்பிடிப்பில் கொண்டாடினார். உதயநிதி ஸ்டாலின் எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இன்னும் பெயரிடப்படாத அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரீன் தெரஸா நடிக்கிறார். படத்தில் சூரியும் உள்ளார்.
இந்நிலையில் சனிக்கிழமை சூரி தனது 39 வது பிறந்த நாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடினார்.
இது குறித்து உதயநிதி கூறுகையில், நான் சூரியின் காமெடிக்கு தீவிர ரசிகனாகி விட்டேன். அவரது பிறந்த நாளை கொண்டாடியதில் பெருமையாக உள்ளது.
சூரியின் கையில் உள்ள படங்களை பார்க்கும் போது அவர் வேற லெவலுக்கு செல்வார் என்றார். சூரி கூறுகையில், ஒருவரின் பிறந்த நாளை தன் பிறந்த நாள் போன்று கொண்டாட பெரிய மனம் வேண்டும்.
என் பிறந்த நாளை கொண்டாட உதயநிதி சார் எடுத்துக் கொண்ட முயற்சி என்றும் என் நினைவில் இருக்கும். அவருக்கும், இயக்குனர் எழிலுக்கும் நன்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றார்.