இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஒருங்கிணைப்பில் இருக்கும் 5 வங்கிகளின் சார்பில் பொதுமக்களிடம் இருந்து சேகரித்த ரூ.342¾ மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியிடம் ஒப்படைக்க
கடந்த 8-ந்தேதி இரவு சேலத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு ரெயிலில் கொண்டு வரப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகள் 226 மரப்பெட்டிகளில் வைத்து ரெயிலின் பார்சல் பெட்டியில் வைக்கப் பட்டிருந்தது.
அந்த பெட்டியின் மேற்கூரையை மர்ம நபர்கள் வெட்டி உள்ளே இருந்த ரூபாய் நோட்டுகள் செய்யப்பட்டு இருந்த மரப்பெட்டிகள் சிலவற்றை உடைத்து ரூ.5.78 கோடி ரூபாய் நோட்டுகளை கொள்ளை யடித்துச் சென்று விட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் கட்டமாக ரெயில்வே பாதுகாப்பு படை மற்றும் அரசு இருப்புபாதை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
ஆனால் எந்த ஒரு துப்பும் கிடைக்காத காரணத்தினால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
கொள்ளை நடந்த ரெயில் சேலத்தில் இருந்து விருத்தாசலம் வரை டீசல் என்ஜின் மூலமாகவும், அங்கிருந்து சென்னை வரை மின்சார வழித்தடத்திலும் இயக்கப் பட்டிருந்தது.
இதனால் விருத்தாசலத்துக்கு பின் ரெயிலில் கொள்ளை யடிக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்பட்டது. சேலத்தில் ரெயில் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த போது கொள்ளை சம்பவம் நடந்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியானது.
சென்னை வந்த ரெயிலில் பொருத்தப் படுவதற்கு முன்னர் பணம் கொண்டு வரப்பட்ட ரெயில் பெட்டி ஈரோட்டிலும், அதற்கு முன்னர் கேரளாவிலும் நிறுத்தப் பட்டிருந்தது.
எனவே அந்த இடங்களில் ரெயில் பெட்டியில் துளை போடப்பட்டிருக்கலாம் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.
இந்நிலையில் ரெயில் கொள்ளை தொடர்பாக துப்பு துலக்க ரெயில் நிலை யங்களில் உள்ள கண் காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது தாம்பரத்தில் பொருத்தப் பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் கொள்ளை நடந்த ரெயி லின் மேற்கூரை பதிவாகி இருந்தது.
அதில் பணம் வைக்கப் பட்டிருந்த பெட்டியின் மேற்கூரை உடைக்கப் படாமல் இருப்பது தெரிய வந்தது.
இதன் காரணமாக ரெயில் சென்னைக்கு வந்த பின்னர் தான் கொள்ளை சம்பவம் அரங்கேறி இருக்கலாம் என்கிற புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
இது பற்றி போலீசார் கூறும் போது, தாம்பரத்தில் பதிவான கேமரா காட்சி கள் தெளிவாக இல்லை என்றும் அதனை துல்லியமாக தெரியும் அளவுக்கு நவீன முறையில் ஆய்வு செய்து வருகிறோம்.
அதன் பின்னரே இது பற்றி எதுவும் கூறமுடியும் என்று தெரிவித்தனர்.
இருப்பினும் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், ரெயில் எழும்பூருக்கு வந்து சேத்துப்பட்டு யார்டுக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னரே அங்கு வைத்து கொள்ளை நடந்திருப்பது அம்பலமாகி உள்ளது.
சேலத்தில் இருந்து ரெயில் பெட்டியில் பணப்பெட்டிகள் ஏற்றப்பட்ட போதே கொள்ளை கும்பல் பெட்டிக் குள் பதுங்கி இருந்திருக்கலாம் என்றே போலீசார் உறுதியாக நம்புகிறார்கள்.
எழும்பூர் வரும் வரை காத்திருந்து சேத்துப்பட்டு யார்டுக்கு ரெயில் சென்றபின் பெட்டிக்குள் இருந்த படியே கொள்ளையர்கள் மேற் கூரையை உடைத்து ரூ.6 கோடி பணத்தை அள்ளிச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது தொடர் பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.