அன்றாடம் அலுவலகங்களில்,அவ்வப்போது வீடுகளில் பயன்படும் பொருளை இளைஞர்கள், பள்ளிக்கூடச் சிறுவர்கள் போதைக்காக எடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை.
இந்த பகீர் தகவலின் பின்னணியில் இருக்கும் அந்தப் பொருள்... ‘ஒயிட்னர்’. எழுத்துக்களில் தவறு இருந்தால், அவற்றை அழிக்கப் பயன்படுவதுதான் இந்த ‘ஒயிட்னர்.’...
‘‘பொதுவாக பதின்மூன்று வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பருவத்தினர் நண்பர்கள் மூலம் இதனைத் தெரிந்து கொள்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு போதை உணர்வு பற்றி யெல்லாம் தெரியாது.
மாறாக, மூக்கருகே வைத்து முகரும் போது,ஒருவித மயக்கம் வருவது போல் தோன்றும். அவ்வளவு தான். நகங்களில் போடும் ‘பாலிஷ்’ கெட்டியாக ஒட்டிக் கொண்டால், அதன்மீது ‘ஒயிட்னர்’ வைத்தால் போதும்.
மாறாக, மூக்கருகே வைத்து முகரும் போது,ஒருவித மயக்கம் வருவது போல் தோன்றும். அவ்வளவு தான். நகங்களில் போடும் ‘பாலிஷ்’ கெட்டியாக ஒட்டிக் கொண்டால், அதன்மீது ‘ஒயிட்னர்’ வைத்தால் போதும்.
ஒரு சில நொடிகளில் ‘பாலிஷ்’ காணாமல் போய், நகங்கள் பளப ளக்கும். இதற்கு ‘ஒயிட்னரி’ல் இருக்கும் ‘டொலீன்’ என்கிற ரசாயனம்தான் காரணம்.
அதோடு ‘டிரை குளோரோ எதிலீன், ‘புரோமோ புரோபேன்,’’ ‘மெதில் பென்ஸீன்’ என் கிற சேர்மங்களும் சேர்ந்து கொள்வதால், ‘ஒயிட்னர்’ கொடிய விஷமாக மாறுகிறது.
மூக்கருகே கொண்டு செல்லும் போது மயக்கம், போதை வருவதற்கும் இது தான் அடிப்படை. அந்த மயக்கம் சில மணிநேரம் வரை நீடிக்கும் ஆபத்து உண்டு!’’
மூக்கருகே கொண்டு செல்லும் போது மயக்கம், போதை வருவதற்கும் இது தான் அடிப்படை. அந்த மயக்கம் சில மணிநேரம் வரை நீடிக்கும் ஆபத்து உண்டு!’’
என்று சொல்லும் அந்த சமூக ஆர்வலர், அதனால் பள்ளிச் சிறுவர்களை பெற்றோர் கண் காணிப்பது அவசியம் குறைந்த விலை,எளிதில் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால், பயன்படுத் துபவர்கள் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வராது.
அன்றாடம் வீட்டுப் பாடங்கள் எழுதும்போது தவறுகள் வந்தால் எளிதில் அழிப்பதற்குத் தேவை. அதனால் ‘ஒயிட்னரை’ தவிர்க்கவும் முடியாது.
‘‘சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் இளைஞர்களிடம் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருவது உண்மை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு முறை ‘ஒயிட்னரை’ முகரும் எண்ணம் வரும். தொடர்ந்தால் போச்சு. அடிமையாகிடுவாங்க.
சிலர் பெட்ரோல், காபித்தூள், தேயிலை மாதிரி பொருட்களை முகர்வது உண்டு. அதனால் வரும் பாதிப்புகள் குறைவு. ஆனால் ‘ஒயிட்னர்’ அப்படி அல்ல. முகரும்போது நேராக மூளை செல்களைத் தாக்கும்.
அதனால் போதை ஏற்படும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலரும் என்னிடம் சிகிச்சைக் காக வருவது உண்டு!’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல மனநல மருத்துவ நிபுணர் லட்சுமி விஜயகுமார்.
சரி. ஒயிட்னர் பயன் படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் வரும்? பொது மருத்துவர் செல்வராஜனிடம் கேட்டோம்.
‘‘ஒயிட்னரில் ‘ஆல்கஹால்’ உண்டு. போதை ஏற்பட அது தான் காரணம். மூச்சுத் திணறல் முதல் மூளை செயலிழப்பு வரை பாதிப்புகள் வரும் ஆபத்து உண்டு!’’ என்கிறார்.
சிறுவர்களிடம் ஒயிட்னர் பயன்படுத்தும் பழக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? என்பது குறித்து பிரபல குழந்தை மருத்துவர் பிரேம் சேகரிடம் கேட்டோம்.
‘‘நீண்ட நாட்கள் பயன்படுத்தி னால் நரம்பு மண்டலம் பாதிக்கும். உறுப்புகள் செயலிழக்கும்!’’ என்கிறார் எச்சரிக்கை கலந்த குரலில்!.
‘‘நீண்ட நாட்கள் பயன்படுத்தி னால் நரம்பு மண்டலம் பாதிக்கும். உறுப்புகள் செயலிழக்கும்!’’ என்கிறார் எச்சரிக்கை கலந்த குரலில்!.
பாதிப்புகள் என்னென்ன?
நுரையீரல் அழற்சி, ஞாபகசக்தி குறையும்,, பேசுவதில் சிரமம். முகர்ந்தால் ஆபத்து, ஒருமுறை ‘ஒயிட்னரை’ முகர்ந்தால் சுமார் நான்கு முதல் பத்து மணி நேரம் வரை போதை இருக்குமாம்.
பைக்குள் வைத்து எளிதில் மறைத்து எடுத்துச் செல்ல முடியும் என்பதால், பெற்றோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம்.
எனவே வீட்டில் இருக்கும் பெற்றோர் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளின் நடவடிக்கை களை எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு பிள்ளை பெறுவதை விட இன்று பிள்ளைகள் வளர்ப்பு மிகப்பெரிய சுமையாகத் தான் தோன்றும்.
ஆனால் இதைப் பார்த்தால் நம் குடும்பம வீனாகித்தான் போகும். எனவே பேறு காலத்தில் பெரும் கஷ்டத்தை கொஞ்சம் நினைத்தால் இது ஒரு பெரிய விசயமில்லைங்க.