கடிகார முள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது?

நாம் தினசரி கடிகாரத்தை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிடமும் இப்போது முக்கியத்துவம் வாய்ந்தாக நமக்கு உள்ளது. 
கடிகார முள் ஏன் வலப்புறமாக சுற்றுகிறது?
ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற அளவு பலருக்கு போதாது என்று கூறி வருகின்றனர். கடிகார சுழற்சி குறித்து தற்போது பார்ப்போம். 

பொதுவாக நாம் பார்க்கும் கடிகாரம் எப்போதும் ஒரே மாதிரி அதாவது வலப்புறமாக சுற்றிவரும், இதனை கடிகார திசை (Clockwise) என்று கூறுகிறார்கள்.

முட்கள் கொண்ட முதல் கடிகாரத்தைச் சீனர்கள் தான் தயாரித்தார்கள். சீனா நிலநடுக் கோட்டுக்கு வடக்கே உள்ளது. வட துருவத்தில், தெற்கே பார்த்து நின்றீர்கள் என்றால்

உங்கள் இடப் புறம் சூரியன் உதித்து வலப் புறம் மறையும். எனவே, அவர்கள் உருவாக்கிய கடிகாரம் இடமிருந்து வலமாக சுற்றுகிறது.
சூரியனை, பூமி 23.5 டிகிரி சாய்ந்த நிலையில் வலப்புறமாக சுற்றுகிறது. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக இடதுபுறத்தில் இருந்து (கிழக்கு) சூரியன் வலதுபுறமாக (மேற்கு) (கடிகார திசையில்) நகருவது போன்று தோன்றும். 

இதனால் தான் இடது புறத்தில் இருந்து வலதுபுறமாக சூரியனின் நிழல் நகர்வதை அடிப்படையாக கொண்டு கடிகார முள்களும் அந்த திசையிலேயே சுற்றுகின்றன.
Tags:
Privacy and cookie settings