இது, மனிதனுக்கு ஏற்படும் ஒரு உடல் உபாதை ஆகும். அத்துடன் மலச்சிக்கல் பல நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகிறது. இதை ஒரு நோய் என்று கருத முடியாது.
எனினும் பலர் இந்த மலச்சிக்கலால் மிகவும் கஷ்டப் படுகிறார்கள். நாம் உண்ணும் உணவு 18 மணி முதல் 24 மணி நேரத்திற்குள் மலமாகி வெளிப்படும்.
அந்தரங்க பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேள் கொடுக்கு மூலிகை !உணவுக்குத் தகுந்தப்படி மலமும் இருக்கும், தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை மலம் கழிய வேண்டும். அப்படி இல்லாமல் இரண்டு, மூன்று நாள் தங்கி மலம் வெளியானால் அதை மலச்சிக்கல் என்கிறோம்.
வெளியாக வேண்டிய மலம் அதிக நேரம் மலக்குடலில் தங்கி விட்டால் உடலில் சேரக் கூடாதவையும், நோய்களை உண்டு பண்ணக் கூடியதுமான பலவித விஷ தன்மை யுள்ள விஷங்கள் இரத்தத்தில் சேர்ந்து விடுகின்றன.
மேலும் மலம் பெருங்குடலில் தங்கி இறுகி கட்டியாகி விட்டால் உடலில் பலவித உடல் உபாதைகளும், நோய்களும் உண்டாக காரணமாகி விடுகிறது.
மலச்சிக்கலு க்கு உள்ளான பெண்களும், சிறுமிகளும் உடன் சிகிச்சை பெற வேண்டியவர் களாக உள்ளார்கள்.
பெண்களின் மலவாசலும் சலவாசலும் அருகருகே இருப்பதனால். நாள்பட்ட மலச் சிக்கலின் போது மலவாசலில் இருந்து வெளிவரும் நோய்க் கிருமிகள் சலவாசலை சென்றடைந்து சலம் சம்பந்தமான பல நோய்களை ஏற்படுத்து கின்றன.
பெண்கள் மலவாசலை கழுவும் போது அல்லது துடைக்கும் போது சலவாசலுக்கு எதிர் பக்கமாக (பின் பக்கமாக) செய்யும்படி வைத்தியர்கள் ஆலோசனை வழங்குகின் றனர்.
காலையில் எழுந்ததும் மலம் போகா விட்டால், பலருக்கு அந்த நாள் முழுவதும் எந்த வேலையும் ஓடாது. வெறும் வயிற்றில் லிட்டர் கணக்கில் தண்ணீர் குடிப்பார்கள்.
சூடாக காபி, தேநீர் அருந்துவார்கள். பீடி, சிகரெட் புகைப்பார்கள். இன்னும் சிலர் எப்படியாவது மலத்தை வெளியேற்றியே தீருவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு மூச்சை இழுத்துப் பிடித்து முக்குவார்கள்.
இந்தப் பகீரதப் பிரயத்தனங்கள் எதுவும் தேவை யில்லை. தினமும் காலையில் எழுந்ததும் மலம் கழித்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் எதுவுமில்லை.
மலம் காலையில் வரலாம். மாலையில் வரலாம். இரவிலும் வரலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை வரலாம். இருமுறை வரலாம். எதுவும் தப்பில்லை.
பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது !
பிட்ஸா, பர்கர், நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகளையும் பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளையும் அதிக அளவில் சாப்பிடுவது.
குடலிறக்கம், பித்தப்பைக் கற்கள், பார்க்கின்சன் நோய், மூளைத் தண்டுவட நோய்கள், மன அழுத்தம், தூக்க மின்மை ஆகிய பாதிப்புகள் இருக்கு ம்போது மலச்சிக்கல் ஒரு முக்கிய அறிகுறியாக வெளிப்படும்.
இதய நோயை தடுக்க தக்காளி ஜூஸ் !
குடல் அடைப்பு, சிறுநீர் அடைப்பு, நெஞ்சுவலி, மயக்கம் ஏற்படலாம். எனவே, மலச்சிக்கலுடன் கீழ்க்காணும் அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்:
காஃபி குடிப்பதால் உடலுக்கு நன்மைகள் என்ன?
தினமும் உடற்பயிற்சி செய்து, மலம் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு வந்ததும் மலம் கழித்துவிடுகிற பழக்கத்தைப் பின்பற்றினாலே போதும்.
இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிட வேண்டும். வாழைப்பழம்தான் சாப்பிட வேண்டும் என்பதில்லை. பருவத்துக்குத் தகுந்த எந்தப் பழத்தையும் சாப்பிடலாம்.