ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை | The women killed in house alone hosur !

ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, கழுத்து அறுத்து கொலை செய்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். தொடரும் கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - தளி சாலையில் விகாஸ் நகர் 6-வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் பாலாஜி. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தீபா(36). 

இவர்களுக்கு தக்ஷனா(12), தனு(9) என்கிற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன், பாலாஜியின் தாய் வரலட்சுமி வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் பாலாஜி பணிக்கும், குழந்தைகள் 2 பேரும் பள்ளிக்கும் சென்று விட்டனர். வீட்டில் தீபா, மாமியார் வரலட்சுமி ஆகியோர் இருந்தனர். மதியம் வரலட்சுமி வெளியே சென்றுவிடவே, தீபா மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், தீபாவை கழுத்த றுத்து கொலை செய்துவிட்டு தப்பி யோடினர். வீட்டுக்கு வந்த வரலட்சுமி, தீபா கொலை செய்யப் பட்டுக் கிடந்தை கண்டு அதிர்ச்சி யடைந்தார். 

தகவலறிந்து வந்த கிருஷ்ணகிரி எஸ்பி(பொறுப்பு) கங்காதர், ஓசூர் ஏஎஸ்பி ரோகிணி பிரியதர்ஷிணி ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். 

கொலை செய்யப்பட்ட தீபாவின் நகைகள் எதுவும் திருட்டு போக வில்லை. இக்கொலை நகை, பணத்துக் காக நடக்கவில்லை என போலீஸார் தெரிவித்துள்ளனர். 

கொலை நடந்த பகுதியில் மர்ம நபர்கள், ரத்தக்கறை படிந்த கத்தியுடன் நடந்து சென்றுள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மத்திகிரி போலீஸார், தீபாவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை நகரமாக மாறி வரும் ஓசூர்

கடந்த சில வாரங்களாக ஓசூர் பகுதியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நிலஅளவையர் குவளைசெழியன் கடத்தி கொலை, கடந்த 1-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி கொலை, மதுபோதையில் வடமாநில வாலிபர் கொலை, 

வழிப்பறி கொள்ளையர்களைப் பிடிக்க சென்ற தலைமை காவலர் முனுசாமி கொலை ஆகியவற்றுடன் நேற்று தீபா என்கிற பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் என அடுத்தடுத்து கொலைகள் நடந்துள்ளன. 

தொழில் நகரமான ஓசூர், கொலை நகரமாக மாறி வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்
Tags:
Privacy and cookie settings