உலகில் எடுக்கப்பட்ட முதல் செல்பி !

1 minute read
தற்போதைய காலகட்டத்தில் செல்பி என்றால் என்னவென்று தெரியாதவரை வேற்று கிரகவாசி அளவுக்கு பார்க்கிறோம். ஆனால் நமக்கு அதை பற்றி எந்தளவும் தெரியும்.
உலகில் எடுக்கப்பட்ட முதல் செல்பி !
அமெரிக்க புகைப்படக் கலையின் முன்னோடியாக கருதப்படும் ராபர்ட் கொரனலிஸ் தான் முதன் செல்பி புகைப்படத்தை எடுத்தவர். ஆனால் இது திட்டமிட்டு எடுக்கப் பட்டதல்ல, 

1839ம் ஆண்டு Daguerreotype கேமராவில் சாதாரணமாக புகைப்படம் எடுக்க முயலும் போது லென்ஸ் மூடியை சரியாக கழட்ட முடியாததால் முன்னாள் ஓடி வந்து முயற்சித்துள்ளார்.

ஒரு நிமிடத்துக்கு மேல் நடந்த இந்த முயற்சியில் மூடியை கழட்டியதும் அந்த புகைப்படம் எடுக்கப் பட்டது.

தன்னை தானே புகைப்படம் எடுத்தல் செல்ப் போர்ட்ரைட் என்பதன் சுருக்கமே செல்பி என்றழைக்கப் படுகிறது. செல்பியின் தமிழாக்கம் தாமி என்று கூறப்படுகிறது.
இன்று உலகம் முழுவதும் அதிகம் பிரயோகிக்கப்படும் வார்த்தையாக உள்ளது. தனிமையாக இருந்தாலும் நான்கு பேர் இணைந்தாலும் உடனடியாக வாங்க ஒரு செல்பி எடுப்போம் என்பதாகத் தான் இருக்கிறது. 

செல்பி எடுப்பதற்கு ஒரு முன் பக்கம் கேமரா உள்ள மொபைலே போதுமானது என்பதால் அனைவரும் எளிதில் எடுத்து விடுகின்றனர்.
Tags:
Today | 17, April 2025
Privacy and cookie settings