கும்பகோணம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 100 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப் பட்டதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த செட்டி மண்டபம் ராதா கிருஷ்ணன் நகரை சேர்ந்தவர் முகமது இக்பால். வெளி நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
திருவாரூர் மாவட்டம் நீடாமங் கலம் அடுத்த கூத்தா நல்லூர் அத்திக் கடையில் இவரது மாமனார் அப்துல் ஹக்கீம் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள் வதற்காக முகமது இக்பால் ஊருக்கு வந்தார்.
நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு மனைவி சலாமத் நிஷா, குழந்தைக ளுடன் அத்திக் கடை சென்றார்.
நேற்று இரவு பக்கத்து தெருவில் வசிக்கும் முகமது இக்பாலின் சகலை முகமது பிஸ்மில்லா அங்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கேட்் மற்றும் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது, 2 பீரோக்களில் ஒன்று மட்டும் உடைந்து இருந்தது. அதில் இருந்த நகை மற்றும் பொருட்களை மர்ம ஆசாமிகள் கொள்ளை அடித்து சென்று இருப்பதும் தெரிய வந்தது.
இது குறித்து முகமது பிஸ்மில்லா முகமது இக்பாலுக்கு தகவல் தெரிவித்தார். அவர் வந்த பின்னர் தான் எத்தனை பவுன் நகைகள் கொள்ளை போனது என தெரிய வரும் என்று திருவிடை மருதூர் டிஎஸ்பி (பொ) பாண்டி தெரிவித்தார்.
வங்கி லாக்கரில் இருந்த சுமார் 100 பவுன் நகைகளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் எடுத்து வந்து பீரோவில் வைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
அந்த நகைகள் முழுவதும் கொள்ளை போனதா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.