மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி ஒரே நாளில் 15 பேர் பலியாகினர். ரெயில் சேவை மும்பை போக்குவரத்தில் மத்திய மற்றும் மேற்கு ரெயில் வேக்கள் சார்பில் இயக்கப்படும்
ரெயில் சேவைகள் இன்றியமை யாததாக விளங்குகின்றன. இந்த ரெயில் சேவைகளை தினமும் 72 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
காலை மற்றும் மாலை ஆகிய பிரதான நேரங்களில் மின்சார ரெயில்களில் கால் வைக்க முடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் காணப்படுகிறது.
இதன் காரணமாக பயணிகள் வாசற்படியில் தொங்கி கொண்டும், ரெயிலின் மேற் கூரையில் ஏறியும் ஆபத்தான பயணம் செய்கிறார்கள்.
இது போன்ற நேரங்களில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்தும், மின்சாரம் தாக்கியும், தண்டவாளங்களை கடக்கும் போதும் ரெயில் மோதியும் அடிக்கடி பயணிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.
15 பேர் பலி
குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுக வழித்தடம் மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் நிகழ்ந்த விபத்துகளில் மொத்தம் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
30 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். காயம் அடைந்தவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இந்த தகவல் ரெயில்வே போலீசார் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.