மாற்றுத் திறனாளி களுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் தங்க வேலுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித் துள்ளார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.
பாரா ஒலிம்பிக் போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் புதன் கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 18ம்தேதி வரை இப்போட்டி கள் நடை பெறுகின்றன.
இன்று நடை பெற்ற ஆண்களுக் கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை வென்றார்.
பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் ஒருவர் தங்கப் பதக்கம் வெல்வது இதுவே முதல் முறை ஆகும். அந்த வகையில் ஒட்டுமொத்த தேசத்திற்கும், தமிழகத் திற்கும் பெருமை தேடித் தந்துள்ளார் மாரியப்பன். அவரின் சாதனை பாராட்டி வாழ்த்துகள் குவிந்து வண்ணம் உள்ளன.
தமிழக அரசு ரூ.2 கோடி பரிசு தொகையும் மத்திய அரசு ரூ75 லட்சம் பரிசுத் தொகையும் அறிவித் துள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித் துள்ளனர்.
மேலும் சமூக வலை தளங்களிலும் மாரியப்பன் சாதனையை பாராட்டி அமிதாப் பச்சன், திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பாராட்டு களை தெரிவித்து வருகின்றனர்.
இதில், வேடிக்கை என்ன வென்றால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திர ராஜனும் தனது டிவிட்டர் பக்கத்தில் தங்கம் வென்ற தமிழகத்தின் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித் துள்ளார்.
ஆனால் தனது வாழ்த்து பதிவில் தவறுதலாக 1.89 மீட்டர் என்பதற்கு பதிலாக 1800 அடியை தாண்டியற்கு பாராட்டுவதாக கூறியுள்ளார். இந்த பதிவை வைத்து சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் தமிழிசை சவுந்திர ராஜனை விமர்சித்து வருகின்றனர்.