கர்நாடகத்தில் நடந்த வன்முறையால் ஐ.டி. நிறுவனங் களுக்கு ரூ.25,000 கோடி நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.
பெங்களூர்-ஓசூர் சாலையில் எலக்ட்ரானிக் சிட்டியில் இன்போசிஸ், டி.சி.எஸ், விப்ரோ எம்பசிஸ், ஆரக்கிள், டெல் என பல ஐ.டி. நிறுவனங் கள் செயல் படுகின்றன.
சர்வதேச நிறுவனங்களும் செயல்படுகிறது. சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெரும் மழை வெள்ளத்தால் பல ஐ.டி நிறுவனங்கள் ஒரு வாரத்துக்கும் மேல் பாதிக்கப் பட்டன.
இதையடுத்து பல ஐ.டி நிறுவனங்கள் பெங்களூருக்கு இடம் மாறின. ஊழியர்க ளையும் பெங்களூருக்கு இடம் மாற்றியது.
புதிதாக வேலையில் சேரும் ஊழியர்க ளுக்கு பெங்களூரில் பயிற்சி அளிக்கப் படுகிறது. இதனால் பெங்களூரில் கடும் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
தற்போது காவிரி பிரச்சினையால் பெங்களூரில் அடிக்கடி பந்த், வன்முறை நடப்பதால் ஐ.டி. நிறுவனங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.
இந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 4 நாட்களுக்கு ஐ.டி நிறுவனங்களின் பணிகள் முற்றிலும் முடங்கிப் போயின.
செப்டம்பர் 2-ந் தேதி நடந்த பாரத் பந்த்தின் போது ஐ.டி. நிறுவனங்கள் கட்டாயப் படுத்தப் பட்டு மூடப் பட்டன. அதன் பிறகு காவிரி பிரச்சினைக் காக பந்த் நடத்தப் பட்ட போதும் ஐ.டி நிறுவனங் கள் மூடப் பட்டன.
தற்போது பஸ்கள், லாரிகள் எரிப்பு காரணமாக பெங்களூரில் ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டு தொடர்ந்து 4 நாட்களாக ஐ.டி. நிறுவனங்கள் செயல் படவில்லை.
அதில் பணியாற்றும் பெரும் பாலான வெளியூர் ஊழியர்கள் வன்முறை க்கு பயந்து வெளியேறி விட்டனர். இதனால் ஐ.டி. நிறுவனங் களுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு ள்ளது.
இது தொடர்பாக அசோசம் அமைப்பு வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில், கர்நாடக த்தில் ஐ.டிதுறை மிகப்பெரிய இழப்பை சந்தித்து ள்ளது. இதில் பெங்களூர் தான் மிகப் பெரிய பாதிப்பை சந்தித் துள்ளது.
கிட்டத் தட்ட 22,000 கோடி முதல் ரூ.25,000 கோடி வரையி லான இழப்பு ஏற்பட்டு ள்ளது. இது உத்தேச தொகை தான் இதை விடவும் அதிகம் இழப்பு இருக்க வாய்ப்பு உண்டு என்று தெரிவித் துள்ளது.
பெங்களூரில் அடிக்கடி நடக்கும் மொழி வெறியர் களின் வன்முறை காரணமாக ஐ.டி நிறுவனங்கள் மட்டு மல்லாது சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களும், தங்கள் இருப்பி டத்தை வேறு மாநிலத்துக்கு மாற்ற முடிவு செய்துள்ளன.
வெளிநாட்டு நிறுவனங் களும் கர்நாடகத்தில் தொழில் தொடங்கும் முடிவை கைவிடும் நிலையில் உள்ளன.
குறிப்பாக வெள்ளத் தால் சென்னையில் இருந்து பெங்களூ ருக்கு இடம் பெயர்ந்த ஐ.டி நிறுவனங் கள் மீண்டும் சென்னைக்கு திரும்ப முடிவு செய்துள்ளன.