முழு அடைப்பு போராட்டம் 30 ஆயிரம் பேர் கைது !

தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முழு அடைப்பு போராட்டம் 30 ஆயிரம் பேர் கைது !
கர்நாடகா வில் தமிழர்கள் மற்றும் அவருடைய உடமை கள், வாகனங்கள் மீதான தாக்குதல் கண்டித் தும், காவிரி நதிநீர் பிரச்சினை யில் தமிழகத்தின் உரிமையை 

நிலை நாட்டுவத ற்கும் தமிழகம் முழுவதும் விவசாயசங் கங்களும், வணிகர்சங் கங்களும் முழு கடை அடைப்பு போராட்டத் துக்கு அழைப்பு விடுத்தி ருந்தனர்.

முழு அடைப்பு போராட்டத்துக்கு தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ், ம.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

ஓட்டல் உரிமையா ளர்கள், லாரி உரிமையாளர்கள், பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் போன்ற பெரும்பாலான சங்கங்களும், அமைப்புகளும் ஆதரவு அளித்தன. 
தமிழகத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைஅடைப்பு போராட்டம் நடை பெற்றது. 

முழு அடைப்பு போராட்டம் காரணமாக சென்னையில் 99 சதவீத கடைகள் அடைக்கப் பட்டிருந்ததை காண முடிந்தது. ஓட்டல்கள், 

இறைச்சி கடைகள், நகைக் கடைகள் போன்ற அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன. எப்போதும் பரபரப்புடன் காணப்படும் முக்கிய வர்த்தக தள பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டிருந்தன.

பெரம்பூர் ஆட்டிறைச்சி கூடம், சிந்தாதிரிப் பேட்டை மீன் மார்க்கெட் போன்ற இறைச்சி கூடங்கள் மூடப்பட்டன. 

பெரும்பாலான பெட்ரோல் டீசல் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. பொதுத்துறை எண்ணை நிறுவனங்களுக்கு சொந்தமான ஒருசில பெட்ரோல் நிலையங்கள் மட்டும் திறந்திருந்தன.

சென்டிரல், எழும்பூர் பிரிபெய்டு ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோக்களை இயக்க வில்லை. ஒரு சில ஆட்டோக்கள் மட்டுமே ஓடின. கால் டாக்சிகளும் குறைந்த அளவிலே இயக்கப்பட்டன. 
காலை நேரத்தில் மாநகர பஸ்கள் வழக்கம் போல் இயக்கப் பட்டாலும், மதிய வேளைகளில் குறைந்த அளவு மாநகர பஸ்களையே சாலைக ளில் காண முடிந்தது. 

மின்சார ரெயில்கள் வழக்கம் போல் இயங்கினாலும், ரெயில் மறியல் போராட்ட அறிவிப்பு எதிரொலி யாக மின்சார ரெயில்கள் புறப்படும் நேரத்தில் சிறிது வித்தியாசம் ஏற்பட்டது.

மாநிலத்தின் பிற பகுதிகளிலும் முழு அடைப்பு போராட்டம் நடை பெற்றது. ரெயில் மறியல் போராட்ட த்தில் ஈடுபட முயன்ற வர்கள் கைது செய்யப் பட்டனர்.

30 ஆயிரம் பேர் கைது
தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் அமைதியாக நடந்தது. தமிழகம் முழுவதும் நடந்த போராட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டனர். 

சென்னையில் போராட்டம் நடத்திய 7100 பேர் கைது செய்யப் பட்டனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.
Tags:
Privacy and cookie settings