செக் மோசடி செய்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர், பாதிக்கப் பட்ட நிறுவன த்துக்கு ₹30 லட்சம் இழப்பீடு வழங்க டெல்லி நீதிமன்றம் உத்தர விட்டது.
டெல்லியை சேர்ந்த ஏபிடி இன்வென்ஸ் மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது மூலதன தேவைக்காக ₹15 கோடி நிதி திரட்ட முயற் சித்தது.
இதற்காக அரியானா ஆட்டோ காஸ்ட்டிங் லிமிடெட் நிறுவன த்தின் இயக்குனர் வினய் குமார் ஜெயினை தொடர்பு கொண்டது. ஜெயினும் மூலதனத் துக்கான நிதியை ஏற்பாடு செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
இதற்காக ஏபிடி நிறுவனம் கமிஷன் முன் பணமாக ₹15 லட்சத்தை ஜெயினுக்கு வழங்கியது. ஆனால் ஜெயின் சொன்னப் படி பணம் ஏற்பாடு செய்ய வில்லை. இதனை யடுத்து தான் வாங்கிய தொகைக்கு அந்த நிறுவனத் துக்கு ஜெயின் காேசாலை வழங்கினார்.
ஆனால், வங்கியில் போதிய பணம் இல்லாததால் ஜெயின் வழங்கிய காசோலையும் இரண்டு முறை திரும்பி வந்தது.
இதனால், மாவட்ட நீதி மன்றத்தில் ஜெயின் மீது ஏடிபி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மாவட்ட நீதிமன்றம் ஜெயினுக்கு எதிராக தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து டெல்லி நீதி மன்றத்தில் ஜெயின் மேல் முறையீடு செய்தார்.
மேல் முறையீட்டு மனு, நீதிபதி ரீதேஷ் சிங் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணை க்கு வந்தது. விசாரணை முடிவில் அவர் தனது தீர்ப்பில் கூறியிருப் பதாவது:
மேல் முறையீடு மனுதாரர் ஜெயின் ஒரு மாதத்துக்குள் ஏடிபி நிறுவனத் துக்கு இழப்பீடாக ரூ.30 லட்சம் வழங்க வேண்டும். மனுதாரர் அபராதத்தை டெபாசிட் செய்ய தவறினால் நீதிமன்ற த்தில் சரண்டர் ஆகி 6 மாதம் சிறை அனுபவிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.