குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் !

குரூப் 4 தேர்வுக்கு வரும் 14-ம் தேதி வரை விண்ணப் பிக்கும் வகையில் கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் !
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் தொகுதி-4.ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5451 காலிப்பணி யிடங்களை நிரப்பும் பொருட்டு, விளம்பர அறிவிக்கை யினை 09.08.2016 அன்று வெளியிட்டது.

இத்தேர்விற்கு விண்ணப் பிக்க 09.08.2016 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப் பட்டு, கடைசி நாளாக 08.09.2016 என நிர்ணயிக்கப் பட்டிருந்தது.

விண்ணப் பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக் காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப் பிக்குமாறு அறிவுறுத்தப் படுகிறார்கள்.

ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப் பதாரர்கள் விண்ணப் பிக்கும் போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது வேறு பிரச்சினை களோ எழ வாய்ப்புள்ளது 
என்று இணைய வழியே விண்ணப் பிப்பது எப்படி (How to Apply) என்ற அறிவுரைகளில் ஏற்கனவே வழங்கப் பட்டுள்ள நிலையிலும், 

கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க அதிக அளவிலான விண்ணப் பதாரர்கள் விண்ணப் பங்களைச் சமர்பித்து வருகின்ற காரணத்தினாலும், 

விண்ணப்பதாரர் களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப் பிக்க 14.09.2016 வரை கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த 16.09.2016 வரையும் கால நீட்டிப்பு வழங்கப் பட்டுள்ளது. இதற்கு மேல் எக்காரணம் கொண்டும் கால நீட்டிப்பு வழங்கப் பட மாட்டாது என்றும் அறிவுறுத்தப் படுகிறது. 
ஆகையால் விண்ணப் பதாரர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி இறுதி நாள் வரை காத்திருக் காமல் முன்னதாகவே விண்ணப்பிக்க அறிவுறுத்தப் படுகிறார்கள்" எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings