சோலார் ஆட்டோவிலேயே 6 ஆயிரம் கி.மீட்டர் !

சோலார் ஆட்டோவிலேயே 6 ஆயிரம் கி.மீட்டர் இந்தியா டூ பிரிட்டன் இந்தியாவில் பிறந்து ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இன்ஜினியர் நவீன் 
சோலார் ஆட்டோவிலேயே 6 ஆயிரம் கி.மீட்டர் !
ரபேலி இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு 6 ஆயிரம் கி.மீட்டர் சோலார் ஆட்டோவில் பயணித்து சாதனை படைத் துள்ளார்.

சூரியச்சக்தி மற்றும் மறு சுழற்சி சக்திகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பயணத்தை அவர் தொடங் கினார். 

அவரது ஆட்டோவில் சோலார் குக்கர் மற்றும் படுக்கை வசதிகள் செய்து கொண்டார்.

குளிப்ப தற்கு ஆங்காங்கு ஏரிகள், ஆறுகள், குளங்களை பயன் படுத்திக் கொண்டார். வழியில் ஒவ்வொரு நாட்டிலும் பலர் உணவு தந்து உபசரிப்பு செய்து ள்ளனர்.

இந்தியா, ஈரான், துருக்கி, பல்கேரியா, செர்பியா, ஆஸ்திரியா, ஸ்விட்சர் லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் வழியாக பிரிட்டன் சென்றடை ந்தார். 
அவர் கடந்த தூரம் 6 ஆயிரம் கிலோ மீட்டர். சிலர் அவருடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

ஈரானில் ஒரு புது அனுபவம் கிடைத்தது. குதிரையின் சாணத்தை எரித்து அந்த புகையை சுவாசிக்கும் போது தொண்டை அலற்சி சரியாவதாக ஈரான் மக்களிடம் இருந்து தெரிந்து கொண்டதாக கூறினார். 

பிரிட்டனுக்கு 5 நாட்கள் முன்னதாக சென்றடைந் திருக்க வேண்டும். ஆனால் அவரது பாஸ்போர்ட் பாரீஸ் சென்ற போது காணவில்லை. 

அங்கு டூப்ளிகேட் விண்ணப்பித்து பெற்றதால் பயணம் தாமதமானதாக தெரிவித்தார். 
இந்தியா போன்ற நாடுகளுக்கு சோலார் சக்தி மிக முக்கியமானது என்பதை வலியுறுத்தவே இந்த பயணத்தை மேற்கொண்டேன். 

இந்த பயணம் எனக்கு பல்வேறு விசித்திர அனுபவத்தை ஏற்படுத்தி யுள்ளது என்றார் நவீன்.
Tags:
Privacy and cookie settings