தமிழர்களுக்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம் என்ற பெயரில் நடத்திய கலவரத்தில் பெங்களூருவில் தமிழ்நாடு பதிவு எண் கொண்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தபட்டது.
மைசூர் ரோட்டில் கே.பி.என்., மற்றும் எஸ்.ஆர்.எஸ்., ஆகிய நிறுவனங் களின் 40 க்கும் மேற்பட்ட சொகுசு பஸ்களை கலவர காரர்கள் தீவைத்து கொளுத்தினர்.
இந்த பஸ் எரிப்பு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 7 பேர் கைது செய்ய பட்டனர். அந்த பெண் பெங்களூ ருவை சார்ந்த பாக்கியஸ்ரீ ()22 ), என்பது தெரிய வந்தது. இந்த பெண் வட கர்நாடகா யாதகிரி மாவட்ட த்தை சார்ந்தவர்.
அந்த பெண் தனது தாய், தந்தையு டன் கடந்த 2 வருடங் களுக்கு முன் பிழைப்பு தேடி பெங்களூரு வந்து கூலி வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத் தன்று வீட்டில் டி.வி.,யில் காவிரி பிரச்சனை தொடர்பான செய்தியை பார்த்து விட்டு, ஏதாவது செய்ய வேண்டும் என்று வெறியுடன் வெளியே வந்து ள்ளார்.
அந்த நேரம் 5 இளைஞர் கள் அந்த பெண்ணை பஸ்சை கொளுத்து மாறு தூண்டியு ள்ளனர். அதை தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசலை ஊற்றி பஸ்சை அந்த பெண் எரித்து ள்ளார்.
இந்த பெண் பஸ்சை எரிக்கும் காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்த சி.சி.டி.வி., கேமிராவில் பதிவாகி யுள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்த பெண் மற்றும் கைதான வர்கள் மீது ஜாமினில் வெளியே வர முடியாத அளவில் 143, 147, 148, 324, 427, 435 உட்பட எழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யபட் டுள்ளது.