கோவாவில் மல்லையாவின் ரூ.85 கோடி சொகுசு பங்களா ஏலம் !

விஜய் மல்லையா வின் ரூ.85 கோடி கோவா சொகுசு பங்களா ஏலம் விடப் படுகிறது. தொழில் அதிபர் விஜய் மல்லையா, நாட்டு டமையாக்க ப்பட்ட வங்கி களிடம் இருந்து ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு, 
கோவாவில் மல்லையாவின் ரூ.85 கோடி சொகுசு பங்களா ஏலம் !
வட்டியுடன் திருப்பி செலுத்தா மல் மார்ச் மாதம் 2–ந்தேதி இங்கிலாந் துக்கு தப்பி விட்டார். அவர் நாட்டுக்கு திரும்பி வந்து, தன் மீது சி.பி.ஐ.யும், மத்திய அமலாக்கப் பிரிவும் தொடுத்துள்ள 

வழக்கு களை எதிர் கொள்ள மறுத்து விட்டார். இதையடுத்து அவருக்குரிய ரூ.1,411 கோடி சொத்து களை கடந்த சில மாதங் களுக்கு முன் அமலாக்கப் பிரிவு இயக்கு னரகம் முடக்கியது.

அதைத் தொடர்ந்து கடந்த 3–ந்தேதி ரூ.6 ஆயிரத்து 630 கோடி சொத்து களை அமலாக்கப் பிரிவு இயக்குன ரகம் முடக்கியது. 

இவற்றின் மூலம் மொத்தம் ரூ.8 ஆயிரத்து 41 கோடி மதிப்புள்ள விஜய் மல்லையா வின் சொத்துகளை அமலாக்கப் பிரிவு இயக்குனரகம் முடக்கி உள்ளது.

இந்த நிலையில், அவர் மீதான பிடியை மேலும் இறுக்கும் விதத்தில் வெளி நாடுகளில் உள்ள அவரது சொத்துகளை முடக்கவும் அமலாக்கப் பிரிவு இயக்குன ரகம் நடவடிக்கை எடுக்கிறது. 
விஜய் மல்லையா வின் ஒவ்வொரு சொத்துக் களையும் ஏலம் விட்டு பணத்தை மீட்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. 

சர்வதேச சுற்றுலா நகரமான கோவாவில் விஜய் மல்லையா வுக்கு சொந்தமான கிங்பிஷர் வில்லா என்ற சொகுசு பங்களா உள்ளது. 

கோவாவின் கேண்டோலிம் கடற் கரையின் முக்கிய இடமாக அவரது பங்களா விளங்கு கிறது 12,350 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 

சொர்க்க லோகம் போன்ற பிரமாண்டமான 3 பெரிய படுக்கை அறைகள், ஒரு பெரிய அறை கொண்ட இந்த பங்களா முழுவதும் கோவா ஸ்டைலில் தேக்கு கட்டைகளால் உள் வடி வமைப்பு செய்யப் பட்டுள்ளது. 

பிரபல வடி வமைப்பு நிபுணர் டீன் டி குர்ஸ் அலங்கார ங்களை வடிவமை த்துள்ளார். இந்த பங்காள வின் மதிப்பு ரூ85 கோடியாகும். ஸ்டேட் பாங்கி இந்த பங்களாவை ஏலத்துக்கு விட நடவடிக்கை எடுத்துள்ளது. 
வருகிற 26, 27-ந்தேதியும் அக்டோபர் 5,6 -ந்தேதியும் ஏலம் எடுக்க விரும்பு பவர்கள் இந்த பங்களாவை ஆய்வு செய்யலாம். 

அதன் பிறகு 19-ம் தேதி ஏலம் விடப் படுகிறது. விஜய் மல்லை யாவின் இந்த பங்களாவை ஏலம் விடுவதன் மூலம் ரூ. 100 கோடி வரையில் திரட்டலாம் என வங்கியார்கள் எதிர் பார்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings