அமெரிக்காவில் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடை பெற்ற இரட்டை கோபுரத் தாக்குதலில் பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக
வழக்கு தொடுக்க வழி செய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் அவை ஆதரவு வழங்கி யுள்ளது.
அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் இருந்த இரட்டை கோபுரம் மீது அல்கொய்தா தீவிரவா திகள் தாக்குதல் நடத்தியதன் 15 ம் ஆண்டு தினம் நாளை அனுசரிக்கப் படுகிறது.
உலகையே அச்சுறுத்திய இந்த தீவிரவாத தாக்குதலில், 2,977 அப்பாவிகள் கொல்லப் பட்டனர்.
அல்கய்தா தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா மேற் கொண்ட நடவடிக்கை களுக்கு பழிதீர்க்க, கடந்த 2001ம் ஆண்டு இதே நாளில் நியூயார்க் நகரில் உள்ள இரட்டை கோபுரத்தின் தாக்குதல் நடத்தினர்.
அமெரிக்காவில் 4 விமானங் களைக் கடத்திய அல்கய்தா தீவிர வாதிகள் அவற்றில் இரண்டு விமானங் களை நியூயார்க்கில் இருந்த இரட்டை கோபுரம் மீது மோதச் செய்தனர்.
இதில் 2 கோபுரங்களும் முற்றி லுமாக நிலை குலைந்து விழுந்தது. உலகையே அதிர்ச்சி யடைய செய்த இந்த தீவிரவாத தாக்குதல் சம்பவத்தில் 2,977 பேர் கொல்லப் பட்டனர்.
இந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்ட 19 பேரில் 15 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள்.
இதை தொடர்ந்து பாதிக்கப் பட்டவர்களின் குடும்பத்தினர் சவுதி அரேபிய அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வழி செய்யும் மசோதவுக்கு, அமெரிக்க மக்கள் பிரதி நிதிகள் அவை ஆதரவு வழங்கி யுள்ளது.
இந்தச் சட்டமூலம் அதிபரால் நிராக ரிக்கப் படலாம் எனும் அச்சுறுத்தல் இருந்தாலும், பிரதிநிதிகள் அவை இந்த ஆதரவைத் தெரிவித் துள்ளது. சவுதி அரேபியா வுடனான உறவுகளை,
இந்த மசோதா சட்ட மானால் பாதிக்கும் என அதை எதிர்ப் பவர்கள் கூறிய நிலையிலும், கடந்த மே மாதம் அமெரிக்க மேலவை யான செனட் இதற்கு ஒப்புதல் வழங்கியது.