மின்னணு அட்டைக்காக ஆதார் விவரங்களை கேட்டு நிர்பந்தம் !

சென்னையில் நியாய விலைக் கடைகளில், குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள அனைவரின் ஆதார் விவரங்களையும் கேட்டு நிர்பந்திப்பதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மின்னணு அட்டைக்காக ஆதார் விவரங்களை கேட்டு நிர்பந்தம் !
பொது விநியோக திட்டத்தில், குடும்ப அட்டைதார ர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்குவதற்காக, மாநிலம் முழுவதும், குடும்ப அட்டைதாரர்க ளிடமிருந்து ஆதார் எண் விவரங்கள் பெறப்பட்டு வருகிறது. 

அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மின்னணு குடும்ப அட்டைகள் சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு, பொருட்கள் வழங்கப் படுகின்றன.

சிகரெட் புகையை விட ஆபத்தானது ஊதுவர்த்தி புகை !

பொது மக்கள் வாங்கும் பொருட்கள் தொடர்பாக உடனுக்குடன், குடும்பத் தலைவரின் கைபேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டு விடுகிறது.

இந்த சேவை மாநிலம் முழுவதும் வரும் ஜனவரி 1 முதல் அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக அனைத்து குடும்ப அட்டைதாரர் களிடமும், ஆதார் எண் விவரங்களை நியாயவிலைக் கடை ஊழியர்கள் பெற்று வருகின்றனர்.

கடை ஊழியர்கள் நிர்பந்தம்

சென்னையில் பல குடும்பங்களில் அனைவரும் ஆதார் எண்களைப் பெறவில்லை. 

இந்நிலையில் குடும்ப அட்டையில் பெயர்கள் இடம் பெற்றுள்ள அனைவரின் ஆதார் எண் விவரங்களுடன் வந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்வோம் என்று நியாய விலைக் கடை ஊழியர்கள் நிர்பந்திக் கின்றனர்.

இதனால் பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக கொடுங்கையூர் எம்.ஆர்.நகரைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர் ஒருவர் கூறும் போது, நாங்கள் கடந்த ஆண்டு தான் சென்னைக்குக் குடி பெயர்ந்து வந்தோம். 

எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் ஆதார் அட்டை இல்லை. ஆனால் அங்குள்ள நியாய விலைக் கடையில் (எண். ஜிஏ001), குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் விவரங்களும் கொடுத்தால் மட்டுமே, ஏற்போம் என்று கட்டாயப் படுத்துகின்றனர் என்றார்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட நியாயவிலைக் கடை ஊழியர்களிடம், ‘அனைவரின் விவரங்களும் தேவை என்று கட்டாயப் படுத்தக்கூடாது என்று உணவுத்துறை அறிவுறுத்தி யுள்ளது.

இந்நிலையில் ஏன் கட்டாயப் படுத்துகிறீர்கள்? என்று கேட்டதற்கு, முன்பு வந்த சுற்றறிக் கையில், அனைவரின் ஆதார் விவரங்களையும் பெறுமாறு தான் கூறப்பட்டிருந்தது. 

இதய வால்வு பாதிப்புக்கு சிகிச்சை செய்வது !

அதன் பிறகு எந்த சுற்றறிக்கையும் வரவில்லை. எங்களுக்கு உயரதிகாரிகள் இட்ட உத்தரவை செயல் படுத்துகிறோம் என்றனர். சென்னையில் ஆதார் எண் பெறு வதில் பல்வேறு சிக்கல்களைப், பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். 

பல மாதங்களுக்கு முன்பு ஆதார் பதிவு செய்தவர்களுக்கு இன்னும் ஆதார் அட்டைகள் வந்து சேரவில்லை. 

அதே கொடுங்கையூரில் மாநகராட்சியின் 37-வது வார்டு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையம் உள்ளிட்ட பல்வேறு ஆதார் மையங்களில் 8 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் எண் பதிவு செய்யாமல் திருப்பி அனுப்புகின்றனர்.

மேலும் ஆதார் எண் பதிவுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த ஆதார் பதிவு மையங்களில் கொடுக்கப் படுவதில்லை. 

ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யும் விண்ணப்பங்களையும் ஏற்பதில்லை. அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்க ளுக்குச் சென்று வாங்கி வர வேண்டும் என்று நிர்பந்திக் கின்றனர்.

விதிமீறல்

நாடு முழுவதும் ஆதார் நிறுவனமான யுஐடிஏஐ மூலம் நேரடியாக ஆதார் வழங்கப் படுகிறது. ஆனால் தமிழகத்தில் மக்கள் தொகை பதிவேடு மூலமாகவே ஆதார் பதிவு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா உத்தர விட்டுள்ளார். 

அதனால் தமிழகத்தில் முதலில் மக்கள் தொகை பதிவேட்டு எண் பெற்று, அதைக் கொண்டு ஆதார் பதிவைச் செய்ய வேண்டும். 

ஆனால் முதல்வரின் உத்தரவை மீறி, ஆதார் பதிவு மையங்களில் மக்கள் தொகை பதிவேட்டுக்குத் தேவையான 14 விவரங்களைக் கொடுத்தால், ஆதாருக்கு தேவையான 5 விவரங்களை மட்டுமே பதிவு செய்து ஆதார் பதிவு செய்து வருகின்றனர். 

மனைவியை வெட்டி வீசிட்டேன்.. எனக்கு எஸ்டேட் பொண்ணு வேணும் ! 

இது போன்ற பல்வேறு அலைகழிப்பு காரணமாக பலர் ஆதார் எண் பதிவு செய்யாமல் இருந்து வருகின்றனர். மேலும் தனியார் பள்ளிகளிலும், 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஆதார் பதிவு நிறைவடைய வில்லை. 

இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் ஆதார் அட்டை இல்லை. இந்நிலையில் குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் விவரங்களையும் கேட்டு நியாயவிலைக் கடை ஊழியர்கள் நிர்பந்தித்து வருகின்றனர்.

நடவடிக்கை

இது தொடர்பாக ஆதார் பதிவை கண்காணித்து வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, நாங்கள் மேற்பார்வை செய்தாலும், மாநில அரசு பணியாளர் களைக் கொண்டு தான் ஆதார் பதிவு பணிகளைச் செய்ய வேண்டியுள்ளது. 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கி பிரச்சினைகள் சரி செய்யப்படும் என்றார்.

Tags:
Privacy and cookie settings