நடிகை கத்ரீனா கைப், நடிகர் சித்தார்த் மல்கோத்ரா ஆகியோர் மும்பை செல்வதற்காக ஏர் இந்தியா விமானத்தில் ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர்.
இதற்காக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு திட்ட மிட்டபடி அவர்கள் நேற்று முன்தினம் இரவு முன்கூட்டியே வந்தனர்.
இந்த நிலையில் திடீரென அவர்களை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதனையடுத்து அவர்களும் ரசிகர்களுடன் விரைவில் வெளியாக உள்ள படத்தை பற்றி நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
இரவு 9.40 மணிக்கு செல்ல வேண்டிய விமானத்தில் 10 மணிக்கு மேல் ஆகியும் அவர்கள் ஏறவில்லை.
இதனால் விமானம் புறப்பட தாமதமானது. இந்நிலையில் அதில் இருந்த மற்ற பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து வேறு வழியின்றி இருவரையும் ஏற்றாமல் விமானம் இரவு 10.45 மணிக்கு மும்பைக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவம் விமான நிலையத்தில் சற்று சலசலப்பை ஏற்படுத்தியது.