ஐயிட்டம் சாங் ஆடுவது ரோபோ சங்கர் !

ஒரு நடிகையாக, ஒரு இயக்குநராக ரசிகர்களிடம் தெரிந்ததை விட சொல்வ தெல்லாம் உண்மை நடுவராகத் தான் லட்சுமி ராம கிருஷ்ணன் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் பரிச்சயம்.
ஐயிட்டம் சாங் ஆடுவது ரோபோ சங்கர் !
அந்த நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் இந்தம் மாவுக்கு ஏன் இந்த பஞ்சாயத்து பண்ற வேலை என்று கமெண்ட் அடித்தாலும் 

அந்த நிகழ்ச்சியால் தங்கள் வாழ்க்கையை மீட்டெடுத்த வர்களின் எண்ணிக்கை அதிகமாம்.

அந்தள வுக்கு ஒரு நடுவராக மட்டு மில்லாமல் நிகழ்ச்சியில் பங்கேற்கி றவர்க ளின் குடும்பத்தில் ஒருவராக இருந்து நியாய அநியாங் களை அலசுகிறார்.

அது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் தனது இயக்குநர் ஆசைக்கு அணை போட்டு விடாமல் அடுத்தடுத்து படங்க ளையும் இயக்கி வருகிறார்.

அந்த வகையில் ஆரோகணம், நெருங்கி வா முத்த மிடாதே படங்களைத் தொடர்ந்து லட்சுமி ராம கிருஷ்ணன் இயக்கத்தில் தயாராகி யிருக்கும் அடுத்த படம் தான் அம்மணி.

வழக்க மான கமர்ஷியல் எல்லை என்பதையும் தாண்டி படம் பார்க்க வருகிற ரசிகர்களை ஏதோ ஒரு வகையில் அவர்களின் மனசுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் படமாக இருக்குமாம் இந்த அம்மணி. 
இன்னைக் கும் என்னோட ஆரோகணம் படத்தைப் பத்தி நான் போகிற இடங்களில் பேசுறாங்க. 

அந்த மாதிரி ரசிகர்கள் மத்தியில் நம்ம படைப்பு ஏதாவது ஒரு வகையில பேச வைக்கணும் என்று சொல்லும் லட்சுமி ராம கிருஷ்ணன் 

சாலம்மா அம்மணி என்கிற இரண்டு பெண் கதா பாத்திரங்களின் நட்பை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியி ருக்கிறாராம்.

இதில் சாலம் மாவாக லட்சுமி ராம கிருஷ்ணனே நடிக்க, அம்மணி யாக ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் த்ரிஷாவுக்கு பாட்டியாக நடித்த சுப்ப லட்சுமி நடித்தி ருக்கிறார்.

படத்தில் லட்சுமி ராம கிருஷ்ணன் செய்த இன்னொரு துணிச் சலான விஷயம் ரோபோ சங்கரை ஐட்டம் டான்ஸர் ஆக்கியது.
எல்லாக் கமர்ஷியல் படங்க ளிலும் பெண்களை ஐட்டம் டான்ஸரா ஆக்கி விடுறாங்க. பதிலுக்கு நாமளும் ஒரு ஆணை ஐட்டம் டான்ஸ் ஆட விட்டா என்னன்னு யோசிச்சேன். 

அதுக்கு ரோபோ சங்கர் ரொம்ப பொருத்தமா இருந்தார். ஆட விட்டுட்டேன் என்றார்.

இந்தப் படம் தயாராகி ரிலீஸ் ஆவதற்குள் லட்சுமி ராமகிருஷ்ண னுக்கும், தயாரிப் பாளர் வெண் கோவிந்தா வுக்கும் பஞ்சாய த்து ஏற்பட்டு விரிசல் விழுந்து விட்டது.

அது எவ்வளவு பெரிய தவறு என்பதை நான் கொஞ்சம் தாமதமாக த்தான் உணர்ந்தேன் என்றார் தயாரிப்பாளர் வெண் கோவிந்தா.

மேலும் அவர் என்னைப் பொருத்த வரை நான் இந்தப் படத்தோட தயாரிப்பாளர் என்பதை விட படத்துக்கு பைனான்ஸ் பண்ணிருக்கேன் என்று தான் நினைத்தேன். 
ஆனால் பிறகு தான் ஒரு படம் தயாராவதில் எத்தனை யோ பேருடைய உழைப்பு இருக்கிறது. அந்த உழைப்பு ஏன் முடங்கிக் கிடக்க வேண்டும்? 

அது சரியல்ல என்று உணர்ந்து இப்போது ரிலீஸ் செய்யத் தயாராகி விட்டேன். அந்த தவறைச் செய்த தற்கு இப்போது நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். 

கண்டிப்பாக இந்தப் படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக எனக்கு அமையும் என்றார்.
Tags:
Privacy and cookie settings