உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் செலவு தொகை !

0 minute read
உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்களின் செலவினத்திற்கான உச்ச வரம்பை திருத்தி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர் 90 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 
உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் செலவு தொகை !
கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலில் ரூ.34,000 வரை செலவு செய்யலாம். கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ரூ.9 ஆயிரம் வரை செலவு செய்யலாம். 

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் ரூ.1,70,000 வரை செலவு செய்யலாம். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலில் ரூ.85,000 வரை செலவு செய்ய லாம் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings