கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் நடந்த மிக மோசமான கலவரம் தொடர்பான காட்சிகளை காட்ட வேண்டாம் என்று தெலுங்கு டிவி சானல் களுக்கு ஹைதராபாத் காவல்துறை தடை போட்டு விட்டது.
இது தொடர்பான எந்தக் காட்சியையும் காட்ட வேண்டாம் என்று டிவி சானல்க ளுக்கு மட்டு மல்லாமல் கேபிள் டிவி ஆபரேட்டர் களுக்கும் காவல் துறை அறிவுறு த்தலை வழங்கி யிருந்தது.
இந்தக் காட்சிகள் மிக மோசமாக இருப்பதால் இது பதட்டத்தை உருவாக்கும் என்றும் தேவையி ல்லாத பிரச்சினைகள் எழலாம் என்ப தாலும் இந்த தடை உத்தரவை ஹைதராபாத் போலீஸார் பிறப்பித் திருந்தனர்.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி கூறுகையில், பெங்களூரு வன்முறைக் காட்சிகளை காட்டக் கூடாது என்று டிவி சானல்கள்,
கேபிள் டிவி ஆபரேட்டர் களுக்கு உத்தர விட்டு ள்ளோம். பக்ரீத் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடை பெறுவதை யொட்டி முன்னெச் சரிக்கை நடவடிக்கை யாக இந்த உத்தரவு பிறப் பிக்கப் பட்டது.
மேலும் வன் முறையைத் தூண்டும் வகையிலான காட்சிகளை காட்டு வதையும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையிலான செய்திகளை ஒளிபரப்பு வதையும் தவிர்க்கு மாறும் கேட்டுக் கொண்டோம் என்றார் ரெட்டி.