அடிப்படை வசதியில்லாத கட்டிடத்தில் அங்கன்வாடி !

கரூர் நகராட்சிக் குட்பட்ட வஉசி வடக்குத் தெருவில் அடிப்படை வசதி இல்லாத வாடகை கட்டிடத்தில் 2 அங்கன் வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. 
அடிப்படை வசதியில்லாத கட்டிடத்தில் அங்கன்வாடி !
குழந்தைகளின் அடிப்படை கல்வியின் தேவை மற்றும் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுதும் அங்கன்வாடி மையங்கள் செயல் பட்டு வருகிறது.

ஆனால், பெரும்பாலான மையங்கள் போதிய வசதி குறைவு போன்ற குறைபாடுகளுடன் தான் செயல் பட்டு வருகிறது. 

கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையம் சார்பில் 300க்கு மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. 

இதில், பெரும்பாலான அங்கன் வாடி மையங்கள் வாடகை கட்டிடங்க ளில் தான் செயல் பட்டு வருகிறது. 

அந்த வகையில் கரூர் நகராட்சிக் குட்பட்ட வஉசி நகர் வடக்குத் தெரு பகுதியில் தென் திருப்பதி நகர் பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக்கான ஒரு அங்கன் வாடி மையமும்,
சிவசக்தி நகர் உள்பட இந்த பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளுக் கான மற்றொரு அங்கன் வாடி மையமும் இதே தெருவில் அடுத்தடுத்து செயல்பட்டு வருகிறது.

இதில், சிவசக்தி நகர் பகுதிகளுக்கான அங்கன் வாடி மையம் ஒரு சிறிய அறையில் வாடகை கட்டிடத்தில் அதுவும் ஓட்டு வீட்டில் செயல்பட்டு வருகிறது. 

இங்கு போதிய பாதுகாப்பு தன்மையில்லை. கடந்த சில ஆண்டுகளாக இதே கட்டிடத்தில் செயல்பட்டு வரும் இந்த அங்கன் வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். 

மதிய உணவும் இதே அறையின் உட்புறம் தான் சமைக்கப் படுகிறது. 

எனவே, குழந்தைகள் நலன் கருதி சொந்த கட்டிடத்திற்கு மாற்றுவத ற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க் கின்றனர்.
இதே போல், இந்த அங்கன் வாடி கட்டிடத் திற்கு அருகிலேயே மற்றொரு வாடகை வீட்டில் தென் திருப்பதி நகர்ப்பகுதிக்கான அங்கன் வாடி மையம் செயல்பட்டு வருகிறது. 

இதிலும், 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். ரூ.500 மாத வாடகையில் மோசமான கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுக்கும் மேலாக அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. 

இதனையும் வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Tags:
Privacy and cookie settings