சிறிய வயதில் மிகப்பெரிய எண்ணம் !

சினிமா நடிகர்களை கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு இந்த சிறுவனைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
சிறிய வயதில் மிகப்பெரிய எண்ணம் !
சக நண்பர்களுடன் வேனில் பள்ளிக்கு போய்க் கொண்டு இருந்த போது, வேன் திடீரென தீ பிடித்தது. 

டிரைவர் வேனில் இருக்கும் பள்ளி சிறுவர்களைப் பற்றி கவலைப் படாமல் கதவை திறந்து கொண்டு தப்பி ஓடி விட்டார், 
ஆனால் ஓம் பிரகாஷ் பயத்தில் அரற்றிய நண்பர்களை காப்பாற்ற கதவை உடைத்து ஒவ்வொரு மாணவனாக காப்பாற்ற துவங்கினான்.

கடைசி நேர முயற்சியின் போது கார் கதவின் ரப்பரில் இருந்த தீ ஓம்பிரகாஷின் கன்னத்திலும், முதுகிலும் பட்டு பயங்கரமாக எரிந்தது,

ஆனால் அந்த வலியையும், வேதனையை யும் விட தன் நண்பர்கள் உயிரே பெரிதென நினைத்த ஓம்பிரகாஷ் நண்பர்களை காப்பாற்றி வெளியே வரவும், வேன் முழுமையாக எரிந்து நாசமானது.
தனக்கு தீக்காயம் ஏற்பட்ட வுடன் பயந்து போய் பாதியிலேயே தனது முயற்சியை கைவிட்டு இருந்தாலோ நிச்சயம் ஒன்றிரண்டு மாணவர்களை தீக்கு பலி கொடுக்க வேண்டி இருந்திருக்கும். 

கேஸ் சிலிண்டர் ஓடும் வேன் என்பதால் எந்த நேரமும் வெடித்து சிதறும் அபாயமும் இருந்தது.
இதை யெல்லாம் பொருட்படுத்தாமல் சிறு காயங்களுடன் தனது நண்பர்களை காப்பாற்றி விட்ட பெருமிதத்துடன் நின்ற ஓம் பிரகாஷ்க்கு அப்போது தான் முகத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் கொடூரம் புரிய ஆரம்பித்தது. 

இதற்குள் அக்கம், பக்கத்தில் இருந்து திரண்டு விட்ட மக்கள் அவனை உடனடியாக மருத்துவ மனையில் சேர்த்தனர்.

நீண்ட சிகிச்சைக்கு பிறகு ஓம் பிரகாஷ் உயிருக்கு ஆபத்தின்றி பிழைத்துக் கொண்டாலும், நடந்த சம்பவம் காரணமாக ஏற்பட்ட வடு அழிக்க முடியாத அளவிற்கு அவனது முகத்தை சிதைத்து இருந்தது. 

ஆனால் அதைப் பற்றி கவலைப் படவில்லை தன்னால் உயிர் பிழைத்த நண்பர்களும்,
கேரளாவில் திருமண மகராக புத்தகங்களை பெற்ற மணமகள் !
அவரது பெற்றோர்களும், உறவினர்களும் மற்று முள்ள பள்ளி நண்பர்களும், ஆசிரியர்களும் பூங்கொத்துடன் தன்னை 

சந்தித்து வாழ்த்து கூறியதையும், கண்ணீருடன் நன்றியை பகிர்ந்து கொண்டதையுமே பெருமையாக நினைத் தான்.

இவனைப் பெற்றவர்கள் பெருமையாக நினைத்தார்கள், இதையும் தாண்டி சிறுவர் களுக்காக வழங்கப்படும் நாட்டின் வீரதீர சாகச செயலுக்கான ( நேஷனல் பிரேவரி அவார்டு ) விருதினை ஜனாதிபதி வழங்கி கவுரவித்தார்.

நல்லதொரு சிறுவனை அறிமுகப் படுத்திய மன நிறைவோடு பகிர்கிறோம்..
Tags:
Privacy and cookie settings