கும்பகோணம் அருகே ரெயில் மோதி கார் டிரைவர் பலி | Car driver killed in train collision near Kumbakonam !

1 minute read
கும்பகோணம் அருகே உள்ள அண்டக்குடி, பாபநாசம் ரெயில்வே நிலையத்திற் குட் பட்ட தண்டவாளம் அருகே நேற்று காலை 30 வயது மதிக்க த்தக்க வாலிபர் ஒருவர் தலை துண்டாகி பிணமாக கிடந்தார். 
இதை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், இது குறித்து கும்பகோணம் ரெயில்வே போலீசா ருக்கு தகவல் தெரிவி த்தனர். 

அதன் பேரில் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வாலிபரின் பிணத்தை மீட்டனர். தொடர்ந்து பிணமாக கிடந்த வாலிபரின் சட்டை பையில் இருந்த டிரைவிங் லைசென்ஸ் மூலம் விசாரணை நடத்தினர். 

அதில் பிணமாக கிடந்த வாலிபர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள இனாம் கிளியூர் வடக்கு தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் விஜயகுமார் (வயது 30) என்பதும், கார் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இதை யடுத்து விஜய குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை க்காக கும்பகோணம் அரசு மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

விஜகுமாரின் மனைவி கனிமொழி(23) கும்பகோணம் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு, 

விஜயகுமார் ஓடும் ரெயில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவா ளத்தை கடந்த போது ரெயில் மோதி இறந்தாரா? அல்லது வேறேதும் காரணமாக என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:
Today | 24, March 2025
Privacy and cookie settings