முதல்வரே எம்எல்ஏக் களோடு கட்சி மாறிய அவலம் !

திரைப்பட கிரைம் காட்சிகளை விஞ்சும் வகையில் திடுக்கிடும் திருப்பங்களோடு அருணாச்சல அரசியல் நடந்து கொண்டுள்ளது. 
முதல்வரே எம்எல்ஏக் களோடு கட்சி மாறிய அவலம் !
முதல்வர் பீமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி, அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால், அங்கு நிலவி வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 

60 இடங்களைக் கொண்ட அருணாசலப் பிரதேச சட்ட சபையில் 45 இடங் களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சிய மைத்திருந்தது. முதல்வராக நபம் துகி பொறுப்பேற்றார். 

இந்நிலை யில் தான் ஆரம்பி த்தது, முதல் திருப்பம். திடீரென நபம் துகிக்கு எதிராக 30 எம்.எல்.ஏ.க்கள் கொடியு யர்த்தினர். இதனால் அம்மாநில அரசியலில் குழப்பம் நிலவியது. 
இதை பயன்படுத்திக் கொண்ட மத்திய அரசு, அருணாச்சல பிரதேச ஆட்சியை கலைத்து விட்டு இவ்வருடம் ஜனவரி மாதம் 26ஆம் நாள் முதல் ஜனாதிபதி ஆட்சியை அமல்படு த்தியது. 

இடையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 11 பேரின் ஆதரவைத் திரட்டினர். 

கலிகோபுல் என்பவரை முதல்வ ராகத் தேர்ந்தெடுத்து ஆட்சி யமைக்க உரிமை கோரினர். இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி விலக்கப் பட்டது. 

மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப் பட்டதையும், பின் விலக்கிக் கொள்ளப் பட்டதையும் எதிர்த்து நபம் துகி உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், நபம் துகிக்கு ஆதரவாக தீர்ப்பளி த்தனர். இதை யடுத்து அவர் மீண்டும் முதல்வரா னார். 
இந்நிலை யில் ஜூலை 16க்குள் அவரது பெரும்பான் மையை நிரூபிக்க வேண்டு மென மாநில பொறுப்பு கவர்னரான ததகத்த ராய் உத்தர விட்டார். 

நபம் துகிக்கு கட்சிக்குள் எதிர்ப்பு நிலவியதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் முன்னரே அவர் பதவி விலகினார். 

எனினும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் முன்பே நபம் துகி பதவி விலகினார். இதை யடுத்து கலிகோபுல் உள்பட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் மீண்டும் காங்கிரசுக்கு திரும்பினர். 

காங்கிரசின் 45 எம்.எல்.ஏ.க்களும் ஒன்றுகூடி கட்சி மேலிடம் எடுத்த முடிவின்படி மறைந்த முதல்வர் டோர்ஜி காண்டுவின் மகனான பீமா காண்டுவை சட்டசபை கட்சி தலைவரா கவும், முதல்வரா கவும் தேர்ந்தெடுத்தனர்.
இந்த சூழ்நிலையில் கலிகோபுல், எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்டார். பதவி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. 

இந்நிலை யில், மாநில முதல்வரான பீமா காண்டு தலைமையில் 43 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து விலகி, 

அருணாசலப் பிரதேச மக்கள் கட்சியில் இணைந்ததால், அங்கு நிலவி வந்த காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 

முதல்வரே கட்சி மாறிய விவகாரம், காங்கிரசுக்கு, தலை குனிவை ஏற்படுத் தியுள்ளது. 

இப்போது நபம் துகி மட்டுமே அருணாச்சல பிரதேசத்தில் எஞ்சியுள்ள ஒரே காங்கிரஸ் எம்எல்ஏ என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Privacy and cookie settings