கொராட்டூரில் உள்ள உறவினர் கள் வீடுகளுக்கு போகும் மக்கள் மாலை 6 மணி ஆன உடன் பெட்டியை கட்ட ஆரம்பித்து விடுவார்கள். காரணம் பச்சை நிற பூச்சித் தொல்லைக்கு பயந்து தான்.
கடந்த ஒரு வாரகால மாகவே பூச்சித் தொல்லை யால் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு சுகாதாரத் துறையினர், பூச்சியியல் நிபுணர்களின் கருத்துக்கள் சற்றே ஆறுதல் தரும் விதமாக அமைந் துள்ளது
சென்னை, கொரட்டூர், அம்பத்தூர், சீனிவாச புரம் பொது மக்களுக்கு தொல்லை கொடுத்து வந்த ஸ்கை ரோனமஸ் பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தை வேளாண்மை பல்கலைக் கழக குழுவினர் கண்டுபிடித்து சாதனை படைத் துள்ளனர்.
இதன் மூலம் இந்த பூச்சித் தொல்லையை ஒழித்து விடலாம் என்ற நம்பிக்கை யை விதைத்துள்ளனர். லேக் வியூ என்று ஆசை ஆசையாக கொரட்டூர் ஏரிக்கரையில் உள்ள அபார்ட் மெண்டில் குடியேறிய மக்களை நோக்கி அட்டாக் செய்தது அந்த பச்சை நிற பூச்சி.
அது மட்டு மல்லாது மாலை நேரங்களில் லைட் போட்டு சற்றே கதவைத் திறந்து காற்றாட அமர முடியாமல் போனது. காரணம் ஒருவித பூச்சித் தொல்லை தான். எப்படி இந்த பூச்சிகள் வந்தன.
ஏன் வருகின்றன என்பதை கண்டு பிடிக்க முடியாமல் தடுமாறித் தான் போனார்கள் அம்பத்தூர், கொரட்டூர் பகுதி வாசிகள்.
பரந்து விரிந்த கொரட்டூர் ஏரி
அம்பத்தூர் அருகே 650 ஏக்கர் பரப்பளவில் கொரட்டூர் ஏரியை, பல ஆண்டு களுக்கு முன் கொரட்டூர் பகுதி மக்கள் பயன் படுத்தி வந்தனர்.
கடந்த சில ஆண்டு களாக அம்பத்தூர் பால்பண்ணை கழிவுநீர், அம்பத்தூர் தொழிற் பேட்டையில் உள்ள தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர்,
ஏரியை சுற்றியுள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், கால்வாய் வழியாக கொரட்டூர் ஏரியில் கலந்தது. இதனால், ஏரி மாசடைந்து விட்டது.
பூச்சிகள் தொல்லை
கடந்த 2 ஆண்டு களுக்கு முன் கொரட்டூர் ஏரியில் இருந்து ஸ்கை ரோனமஸ் என்ற சிறு பூச்சிகள், இந்த ஏரி தண்ணீரில் உருவானது. இந்த பூச்சிகள் மக்களுக்கு பாதிப்பை ஏற்படு த்தியது.
இதுபற்றி மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரி களுக்கு மக்கள் புகார் அளித்தனர். ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல், மெத்தனமாக இருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங் களாக லட்சக்க ணக்கான ஸ்கை ரோனமஸ் பூச்சிகள், ஏரியில் இருந்து படையெடுத்து குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தன.
தொல்லை தந்த பூச்சிகள்
கொரட்டூர் பகுதிக ளான சீனிவாசபுரம், காந்தி நகர், மேட்டு தெரு, பள்ளத் தெரு, எல்லையம் மன் நகர், டிடிபி காலனி, கருக்கு, முத்தமிழ் நகர், மூகாம் பிகை நகர் உள்பட பல பகுதிகளில் உள்ள தெருக்கள், வீடுகளில் தினமும் மாலை நேரங்களில் புகுந்து விடுகிறது.
மேலும், பொது மக்கள் கண், மூக்கு, காது, வாய் ஆகியற்றில் நுழைந்து தொல்லை கொடுக்கிறது. இந்த பூச்சிகள் கண்ணில் படுவதால், பார்வை குறைவு மற்றும் எரிச்சல் ஏற்படுகிறது.
எனவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் விளக்கு களை அணைத்த பிறகு, பூச்சிகளின் தொல்லை குறைகிறது. இதை யொட்டி, இருளிலேயே சாப்பிட்டு, தூங்கும் அவலநிலை ஏற்பட்டது.
சுகாதாரத் துறை அதிகாரிகள் ஆய்வு
தமிழக முதல்வர் ஜெயலலிதா வரைக்கும் புகார் போன பின்னர் தான், முதல்வரின் உத்தரவின் பேரில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி, சுகாதாரத் துறை
முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் தா.கார்த்திக் ஆகியோர் கொரட்டூர் ஏரி மற்றும் அதனை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதியில் ஆய்வு செய்தனர்.
ரசாயனக் கழிவுகள்
கொரட்டூர் ஏரி தெர்மாகூல், பிளாஸ்டிக், குப்பை, கழிவுகள் நிறைந்து மாசடைந்த நிலையில் காணப் படுகிறது. சுற்றுச் சூழலுக்கு மேலும் மாசு ஏற்படுத்தும் வகையில் ரசாயன கழிவுகளும் ஏரியில் மிதக்கின்றன.
இதனால் ஏரி பச்சை நிறத்தில் காணப் படுகிறது. ரசாயன கழிவுகள் ஏரியின் நீர் மட்டத்தில் மேலே ஒரு அடுக்குபோல படிந்து காணப் படுகிறது.
நீந்த மறுக்கும் வாத்துக்கள்
ஸ்கை ரோனமஸ் நுண் புழுக்களை அழிப்ப தற்காக ஏரியில் 200 வாத்துகள் விடப்ப ட்டுள்ளன. ஏரி நீர் மாசு அடைந்து காணப்படு வதால் இந்த வாத்துகள் உள்ளே நீந்தி செல்ல மறுக்கி ன்றன.
ஏரியின் உள்ளே சிறிது தூரத்திற்கு நீந்தி சென்று விட்டு உடனே கரை திரும்பு கின்றன. கரை திரும்பும் வாத்துகள், ஏரி நீரின் வர்ணத்துக்கு ஏற்ப பச்சை நிறத்தில் காணப் படுகின்றன.
அசவுகரி யமாக இருப்பதால் ஏரியின் உள்ளே செல்ல மறுத்து வாத்துகள் கூட்டமாக கரை ஒதுங்குகின்றன.
இவ்வாறு ஒதுங்கும் வாத்துகளை மாநகராட்சி ஊழியர்கள் உள்ளே செல்லுமாறு கரை யோரத்தில் நின்று குச்சிகளால் விரட்டு கின்றனர்.
பூச்சியியல் நிபுணர்கள் ஆய்வு
நெல்லை மாவட்டம் கிள்ளிக் குளம் வேளாண்மை கல்லூரி யின் பூச்சியியல் துறை தலைவரும், விஞ்ஞானியுமான பேராசிரியர் பி.எம்.எம்.டேவிட், பேராசிரி யர்கள் தேவநாதன், சுமதி ஆகியோர் அடங்கிய வேளாண்மை பல்கலைக் கழக குழுவினர் நேற்று கொரட்டூர் ஏரிக்கு வந்தனர்.
அவர்கள் ஏரியில் உள்ள நுண் புழுக்களை சேகரித்தனர். சிறிய புழுக்கள் முதல் பெரிய புழுக்கள் வரையிலும் வேளாண்மை பல்கலைக் கழக குழுவினர் எடுத்து ஆய்வு செய்தனர்.
ஒளிரும் ஏரி
இதையடுத்து சுகாதாரத் துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதா கிருஷ்ணன் ஸ்ககை ரோனமஸ் பூச்சி ஒழிப்பு பணிகளை நேரில் வந்து ஆய்வு செய்தார்.
கொரட்டூர் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த செடி, கொடிகள் வெட்டி அகற்றப் பட்டன. ஸ்கை ரோனமஸ் பூச்சிகள் புழுக்களாக இருந்து வளரும் போதே அழிக்கும் வண்ணம் அந்த ஏரியில் வாத்துகள் விடப் பட்டுள்ளன.
ஸ்கை ரோனமஸ் பூச்சிகளை கவர்ந்து இழுக்கும் வகையில் விளக்குகள் ஏரியை சுற்றிலும் போடப் பட்டுள்ளன. குடியிருப்பு பகுதிகளில் எண்ணெய் யில் நனைத்த காகிதங் களை வீடுகளில் பொதுமக்கள் தொங்க விட்டுள்ளனர்.
உற்பத்தியாகும் இடம் எது?
பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல சுகாதாரத் துறை அதிகாரி டாக்டர் ஷீலா உள்ளிட்ட சுகாதாரத் துறையை சேர்ந்த அதிகாரிகள் அந்த பகுதியில் முகாமிட் டுள்ளனர்.
இயற்கை யான முறையில் ஸ்கை ரோனமஸ் பூச்சிகளின் இனப்பெருக் கத்தை தடை செய்ய அதிகாரிகள் குழுவினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பூச்சியியல் நிபுணரான பேராசிரியர் பி.எம்.எம்.டேவிட் தலைமை யிலான குழுவினர் ஸ்கை ரோனமஸ் பூச்சிகள் உற்பத்தி யாகும் இடத்தை கண்டு பிடித்து சாதனை படைத் துள்ளனர்.
எளிதாக அளிக்கலாம்
பூச்சியியல் நிபுணரான பேராசிரியர் பி.எம்.எம்.டேவிட் செய்தியாளர் களிடம் பேசினார்.
அப்போது அவர், ஸ்கை ரோனமஸ் பூச்சிகள் உற்பத்தியாகும் இடத்தில் இருந்தே அதனை இயற்கையான முறையில் எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஆராய்வதற்காக நாங்கள் வந்திரு க்கிறோம்.
ஏரியில் உள்ள நீரில் காணப்பட்ட நுண் புழுக்களை எடுத்து ஆய்வு செய்தோம். சுற்றுச் சூழல் மாசுபடும் இடங்களில் இந்த வகையான ஸ்கை ரோனமஸ் பூச்சிகள் காணப்படும்.
இந்த பூச்சிகள் கடிக்காது. அதே சமயத்தில் அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உள்ளது. கண்களில் இருந்து நீர் ஒழுகுதல், மூக்கு வடிதல், ஆஸ்துமா நோயாளி களுக்கு மூச்சு திணறல் உள்ளிட் டவற்றை ஏற்படுத்தும்.
தீயில் சாகும் பூச்சிகள்
ஸ்கை ரோனமஸ் பூச்சிகள் மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை வெளிச்சத்தை தேடி பறந்து செல்லும். இரவு நேரங்களில் குப்பை கழிவுகளை போட்டு எரித்தால், அந்த தீயில் விழுந்து இறந்து விடும்.
வீடுகளில் தேங்கிய கழிவு நீரில் இருந்தே ஸ்ககை ரோனமஸ் பூச்சிகளை உருவாக்கும் புழுக்கள் உற்பத்தி யாகின்றன. இதனை சில வீட்டின் அருகே தேங்கி யிருந்த கழிவு நீரில் ஆய்வு செய்து கண்டு பிடித்து ள்ளோம்.
ஆகவே ஸ்கை ரோனமஸ் புழுக்களை ஒழிக்க தேங்கிய கழிவு நீரில் பிளீச்சிங் பவுடர் போட வேண்டும்.
மேலும் வீடுகளின் அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதனை செய்தால் ஸ்கை ரோனமஸ் பூச்சிகளை ஒழித்து விடலாம்.
நிரந்தரமாக ஒழிப்போம்
இரவு நேரங்களில் தீப்பந்தங் களை எரிக்க வேண்டும். மழைக் காலத்துக்கு முந்தைய லேசான மழை பெய்யும் சூழல் ஸ்கை ரோனமஸ் பூச்சிகளுக்கு ஏற்ற சூழல் ஆகும்.
மழைக் காலங்கள் தொடங்கிய பின்னர் இந்த பூச்சிகளின் தொல்லை இருக்காது.
மீன்களுக்கு உணவாக ஸ்கைரேன மஸ் புழுக்கள் பொதுவாக பயன் படுத்தப் பட்டு வருகிறது. நிரந்தரமாக ஸ்கைரோனமஸ் பூச்சி பிரச்சினை க்கு தீர்வு காண நடவடிக்கை கள் மேற் கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.
அச்சம் தேவையில்லை
முதல்வர் ஜெயலலிதா உத்தரவுக்கு இணங்க, ஸ்கைரோனமஸ் பூச்சிகளை ஒழிப்ப தற்கு பொது சுகாதாரத் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து பல்வேறு நடவடிக்கை களை எடுத்து வருகிறது
என்று கூறியுள் ளார் ஜெ. ராதகிருஷ்ணன். தெளிப்பா ன்கள் மூலம் மருந்துகள், குளோரின் பவுடர் தெளிக்கப் பட்டு வருகிறது. ஸ்கை ரோனமஸ் பூச்சிகளை யும் நிரந்தர மாக ஒழித்து விடுவோம்.
ஆகையால் பொது மக்கள் இது குறித்து எந்தவித அச்சமும் அடைய வேண்டாம் என்றும் அவர் ஆறுதல் வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் ஏரியில் ரசாயனம் கலப்பதை தடுத்து, தண்ணீரை சுத்தப்படுத்த வேண்டும் என்று பூச்சியியல் ஆர்வலர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.