சீனாவின் முதல் விண்வெளி நிலையம் என்ற பெருமை யைப் பெற்ற டியான்காங் 1 விண்வெளி நிலையம் கட்டுப் பாட்டை இழந்து விட்டது.
அது பூமியை நோக்கி வருவ தாகவும், பூமியில் வந்து அது விழும் என்றும் விஞ்ஞானி கள் தெரிவித்து ள்ளனர். இருப்பினும் பூமியில் எங்கு வந்து விழும் என்பது தெரிய வில்லை.
கடந்த 2011ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விண்ணுக்கு அனுப்பப் பட்டது இந்த விண் வெளி நிலையம். டியான்காங் 1 என பெயரிடப்ப ட்ட இது சீனாவின் முதல் விண்வெளி நிலையம் ஆகும்.
டியான்காங் 1 விண்வெளி நிலையத்தை அடிப்படை யாக வைத்து 2020ல் மிகப் பெரிய விண்வெளி நிலை யத்தை கட்டமைக்க திட்ட மிட்டிரு ந்தது சீனா.
ஆனால் டியான்காங் 1 தற்போது கட்டுப் பாட்டை இழந்து விட்ட தால் பூமியில் வந்து விழப் போகிறது. பூமியில் விழும்போது துகள் களாக வந்து விழும் எனத் தகவல்.
2017ல் பூமியில் வந்து விழும் இருப் பினும் அடுத்த ஆண்டு தான் இந்த விண்வெளி நிலையம் பூமியில் வந்து விழுமாம்.
இது தொடர்பான செய்திகள் முன்பு வதந்தியாக வலம் வந்தன. தற்போது சீனாவே அதை உறுதிப்படுத்தி விட்டது. விண்வெளி நிலையம் கட்டுப் பாட்டை இழந்து விட்டதாக அது கூறி யுள்ளது.
எரியும் அல்லது விழும் இந்த விண்வெளி நிலைய மானது அப்படியே முழுமை யாக பூமியில் வந்து விழ வாய்ப் பில்லை. மாறாக அது வளிம ண்டலத்தி ற்குள் நுழைந்த துமே எரிந்து விடும்.
உதிரி பாகங்க ளாக அது பூமியில் வந்து விழும். கடலில் அது விழலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதை சீனாவோ அல்லது நாசாவோ உறுதிபடச் சொல்ல முடிய வில்லை.
அது எங்கு விழும் என்பதை அனுமா னிக்க முடிய வில்லை என்று விஞ்ஞா னிகள் கூறியு ள்ளனர்.
போறது ஈசி.. திரும்புறது கஷ்டம் பூமிக்கு ஒரு விண்கலம் பத்திர மாக திரும் புவது என்பது எல்லா நாடுகளு க்கும் இன்னும் சாத்திய மாக வில்லை. அது மிகப் பெரிய கடினமான ஒன் றாகும்.
காரணம், பூமியிலி ருந்து விண்வெளி க்கு ஏவுவதை விட பூமிக்கு விண் கலத்தைத் திரும்பக் கொண்டு வருவது ரொம்பக் கஷ்டமான காரிய மாகும்.
முக்கால் வாசி எரிந்து விடு்ம் சீன விண்வெளி நிலையம் குறித்து சீன விணவெளி என்ஜீனி யரிங் அலுவலக துணை இயக்குநர் வூ பிங் கூறுகை யில் பூமியில் வந்து விழுவத ற்கு
முன்பே பெரும் பாலான பகுதிகள் எரிந்து சாம்பலாகி விடும் என்றார். எதுக்கும் ராத்திரி தூங்கும்போது வானத்தை ஒருவாட்டி பார்த்துட்டு தூங்குங்க.. இப்ப இல்ல, அடுத்த வருஷம்!