காப்பிரைட், பேட்டன்ட், டிரேட் மார்க் என்றால் என்ன?

சரி... காப்பிரைட், பேட்டன்ட், டிரேட் மார்க் என்றெல்லாம் சொல்கிறார்களே அதை பற்றி மேலதிக விவரம் எதுவும் தெரியுமா? தெரிந்தால் சந்தோசம். தெரியா விட்டால் தெரிந்து கொள்ளுங்கள்.
காப்பிரைட், பேட்டன்ட், டிரேட் மார்க் என்றால் என்ன?
பேட்டன்ட்:

யாராவது ஒரு புதிய பொருள் கண்டுபிடித்தால் அதற்கு வழங்கபடுவது பேட்டன்ட். அது பொருள் மட்டும் அல்ல புதிய டிசைனுக்கும் வழங்கப் படுகிறது.

டிசைன் என்றால்?

ஒரு புது காரோ, புது பைக்கோ அதன் பாடி மாடலை நீங்கள் வடிவமைத்திருந்தால் அதற்கு பேட்டன்ட் உரிமை பெற்று கொள்ளலாம்.
ஆஸ்ப்ரின் என்னும் அருமருந்து - சர்வரோக நிவாரணி !
அது வெளிப்புற தோற்றத்திற்கு மட்டும் தான். அதன் உள்புற அமைப்புக்கு உரிமை கொண்டாட முடியாது. தொழில் நுட்பத்தை பற்றியும் பேச முடியாது.

இது ஆயுள் காலத்திற்கும் பொருந்துமா என்று கேட்டால், டிசைன் மாடலுக்கு பொருந்தாது. அது பத்து வருஷத்திற்கு மட்டும் தான் செல்லுபடியாகும். 

விடாமல் கேட்டால் மறு ஐந்து வருஷத்திற்கு மட்டும் ஓகே சொல்லுவார்கள். சரி... ஏற்கனவே இருக்கும் பொருள்களை சிறு சிறு மாற்றங்கள் செய்து அதற்கு உரிமை கொண்டாட முடியுமா?
முடியாது. அப்பறம் மண்டபத்தில் பாட்டெழுதி வாங்கிய தருமி கதையாக முடிந்து விட்டும். உங்கள் கண்டுபிடிப்பு என்று சொன்னால் அதற்கென சில வழி முறைகள் இருக்கிறது.

அது உருவாக்கப்பட்ட விதம், செயல்படும் விதம் பற்றிய முழு தியரி சமர்பிக்க வேண்டும்.

இதுவும் இதுவும் சேர்ந்ததால் இது வந்தது. அதுவும் அதுவும் சேர்ந்ததால் அது வந்தது என்பதை செய்முறை விளக்கத்தோடு நிருப்பிக்க வேண்டும்.

அப்படி நிருபித்தால் அதற்க்கு நீங்கள் தான் உரிமையாளர். இது மட்டும் பத்தாது. அது மக்கள் பயன்பாட்டுக்கு உரியதாக இருக்க வேண்டும்.

இந்த சோதனைகளை நீங்கள் கடந்தால் உரிமை இருபது வருடங்களுக்கு பெறலாம். சரி.. நாம் தான் உரிமை பெற்று விட்டோம் என்று சும்மா இருக்க முடியாது.

அதில் ஏதாவது மாற்றங்கள் செய்து புதுமையை புகுத்த வேண்டும். இல்லா விட்டால் தூங்கியவன் கண்ணு கிடாகண்ணு கதையாகி விடும்.
காப்பிரைட்:
காப்பிரைட் உரிமை என்பது கற்பனையில் உருவாகும் படைப்பு களுக்கும், தனி திறமையில் உருவாகும் ஓவியங்கள், புகைப்படங்கள், கலை படைப்பு களுக்கு வழங்கப் படுகிறது.

கற்பனையில் உருவாகுவது என்றால், கதை, கவிதை, கட்டுரை, சினிமா, இசை போன்றவை வரும். சில சினிமாக்களை பார்த்தால் அதற்கு முன்பு வந்த சினிமாவை நினைவு படுத்தும் காட்சிகள் இருக்கும்.

ஆனால் அதையே முழு காப்பியாக செய்தால் கண்டன குரல் எழும்பும். அதையே வேறு கோணத்தில் செய்தால் பிரச்சனை இல்லை.

உதாரணமாக நாயகன் படம். இந்த படத்தை இன்னொரு கோணத்தில் இருந்து யோசிக்க பட்டது தான் தேவர்மகன். அப்படி புதுமையாக செய்தால் யாரும் கேள்வி எழுப்ப மாட்டார்கள்.

இந்த காபிரைட் என்பது அதை எழுதிய அல்லது உருவாக்கிய படைப்பு களுக்கு அவர் இருக்கும் வரை வழங்கப்படும். அப்படியானால் அவர்கள் காலத்திற்கு பிறகு இல்லையா?

உண்டு. அடுத்து 50 ஆண்டு காலம் அவரின் வாரிசுதார் களுக்கு வழங்கப்படும். அதன் பிறகு பொது சொத்தாக மாறும். இது சினிமாவுக்கு பொருந்தாது.
டிரேட்மார்க்:
நிறுவனம், கம்பெனி, பத்திரிக்கை இப்படி தங்களுக்கென தனிப்பட்ட அடை யாளத்தை ஏற்படுத்தி கொள்ள உதவுவது டிரேட்மார்க்.

இதில் ஏதாவது உள்ளடி வேலை செய்து மாற்றுவதில் பலர் கைதேர்ந்த வர்களாக இருக்கிறார்கள் என்பது வேறு. இருப்பினும் அதை அப்படியே பயன்படுத்தி னால் சட்டப்படி குற்றம்...
Tags:
Privacy and cookie settings