குஜராத் மாநிலம் சூரத் அருகேயுள்ள கிம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு 15 வண்டிகளுடன் விரைந்த தீயணைப்பு வீரர்கள் நெருப்பை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
தீ விபத்தி னால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சிய ளிக்கிறது. இந்த பயங்கர தீ விபத்தில் தொழிற் சாலையில் இருந்த லட்சக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் உருகி சேதமடைந் துள்ளன.
இந்த தீ விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்