ஜெயலலிதாவுக்கு சிகிச்சை ஒரு பக்கம்... செல்பி மறுபக்கம் !

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்போலோ மருத்துவ மனை எதிரே அமர்ந்து கொண்டு செல்போனில் செல்ஃபி எடுத்துள்ளனர்.
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை ஒரு பக்கம்... செல்பி மறுபக்கம் !
அதிமுக நிர்வாகிகளான சி.ஆர்.சரஸ்வதியும், பாத்திமா பாபுவும். நடிகைகளான சி.ஆர்.சரஸ்வதி, அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளராகவும், பாத்திமாபாபு, தலைமை பேச்சாளராகவும் உள்ளனர். 

இவர்கள் அப்பல்லோ மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து நலம் விசாரிக்க சென்றனர். இதன் பிறகு மருத்துவமனை வெளியே வந்து அமர்ந்து கொண்டு, செல்ஃபி எடுத்துள்ளனர்.

பாத்திமா பாபு செல்போனில் செல்ஃபி எடுக்கப் பட்டதை போல தெரிகிறது. சரஸ்வதி அதற்கு போஸ் கொடுத்துள்ளார். இந்த போட்டோ வார இதழ் ஒன்றின் போட்டோ கிராபரால் கிளிக் செய்யப்பட்டு விட்டது.

அதிமுக தொண்டர்கள் எல்லோரும், ஜெயலலிதா குணமாக வேண்டி, கோயில், கோயிலாக வலம் வந்து வேண்டி வரும் நிலையில், இவ்விரு முக்கிய நிர்வா கிகள் ஜாலியாக செல்பி எடுத்துள்ளது தொண்டர்களை அதிர்ச்சிக் குள்ளாக் கியுள்ளது.
ஜெயலலிதா இதை கண்டு கொள்ளாமல் விடுவாரா, அல்லது, சீரியஸ்னஸ் இல்லாமல் செல்ஃபி எடுத்ததற்காக பதவியை பறிப்பாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Tags:
Privacy and cookie settings