பா.ஜனதாவில் இருந்து சித்து விலகல் !

பா.ஜனதா வில் இருந்து சித்து விலகினார். அவரது மனைவி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.பா.ஜ.க. சார்பில் டெல்லி மாநிலங் களவை எம்.பி.யாக முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து இருந்தார். 
பா.ஜனதாவில் இருந்து சித்து விலகல் !
அவர் ஜூலை மாதம் தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். கட்சி மேலிடத்துடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ராஜினாமா செய்தார் என்று கூறப்பட்டது. 

அதை தொடர்ந்து அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்து பஞ்சாப் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவார் என எதிர் பார்க்கப் பட்டது. 

ஆனால் அவர் புதிதாக ஒரு இயக்கத்தை தொடங்கினார். அதன் மூலம் பஞ்சாப் மாநில வளர்ச்சி க்கு பாடுபட போவதாக அறிவித்தார்.

அதை தொடர்ந்து இன்று பா.ஜனதா கட்சியில் இருந்து விலகினார். அக்கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து விலகு வதாகவும் அறிவித்தார். 

சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும் பா.ஜனதா கட்சி சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆக இருந்தார். 
கணவர் சித்து பா.ஜனதா வில் இருந்து விலகி யதை தொடர்ந்து அவரும் இன்று தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா செய்த நவ்ஜோத் கவுர், சர்வாதி காரத்திற்கு எதிராக போராடப் போவதாக அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்து உள்ள பேட்டியில், நான் தனிப் பட்டவள், என்னுடைய பகுதியில் உள்ள பிரச்சனை களை கையில் எடுத்தேன். ஆனால் என்னுடைய பணி யினை செய்ய அனுமதிக்கப் படவில்லை. 

இது ஜனநாயகம் கிடையாது, இது சர்வாதி காரம். நான் சமூக பிரச்சனை யை எழுப்பினால் அது எப்படி கட்சிக்கு எதிரான நடவடிக் கையாகும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

2014 பாராளு மன்றத் தேர்தலில் பா.ஜனதா சார்பில் அமிர்தசரஸ் தொகுதியில் அருண் ஜெட்லி நிறுத்தப் பட்டார். அத்தொகுதி எம்.பி.யாக 10 ஆண்டுகள் பதவி வகித்த சித்துவிற்கு சீட் வழங்கப் படவில்லை, 
இதனால் அவர் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் அமிர்தசரஸ் தொகுதியில் அருண் ஜெட்லி தோல்வி அடைந்தார். இதனையடுத்து உள்ளூர் பா.ஜனதா தலைவர் கள் அருண் ஜெட்லி தோல்வி க்கு சித்துவை குற்றம் சாட்டினர்.
Tags:
Privacy and cookie settings