ராம்குமார் சிறையில் மின்சார ஒயரை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தகவலில் பல்வேறு சந்தேகங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த சந்தேகங்களை தீர்க்கும் பிரேத பரிசோதனை இன்னமும் நடை பெறவில்லை.
இந்நிலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உடல்களை பிரேதப்பரி சோதனை செய்த பிரபல உடற்கூறு மருத்துவர் டிகால் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில்
ராம்குமார் மின்சர ஒயரை கடித்து தற்கொலை செய்திருந் தால் என்ன ஆகியிருக்கும் என்பதை விளக்கியி ருக்கிறார்.
ராம்குமார் மின் கம்பியைக் கடித்திரு ந்தால் அவரது வாய் எரிந்திருக் கனும். ஆனால் அவரது வாயில் எரிந்ததற்கான காயம் இல்லை என்கின்றனர்.
நீர் பதம் இருக்கும் சமயத்தில் காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு தான்.
மேலும் வாயின் உள்பகுதி க்குள் மின் கம்பியை அழுத்திக் கடித்திருந்தாலும், கால் வழியாக மின்சாரம் கடத்தப் பட்டு அந்த இடத்தில் காயம் கட்டாயம் ஏற்படும்.
மின் கம்பியைக் கடிக்கும் போது உடலின் உள் மின்சாரம் பாய்வதால் தோல் அதைத் தடுக்கும் வேலை யில் ஈடுபடும்
ஆனால் மின்சார கம்பியை கடித்து இறந்ததாக கூறப்படும் ராம்குமாரின் உடலில் இந்தகைய காயங்கள் இருப்பதாக ராய ப்பேட்டை அரசு மருத்துவ மனையில் வழங்கப் பட்ட சான்றிதழில் இல்லை.