எல்லாமே பிசினஸ் மைண்ட்.. விஜய் சேதுபதி !

எந்த ஒரு விஷயம் பண்ணாலும்... ப்ளான் பண்ணி பண்ணனும்... என்று வடிவேல் சொல்ற மாதிரி தான் இருக்கு விஜய் சேதுபதி செய்றது. சமீபத்தில் றெக்க படத்தின் இசை வெளியீடு பிரம்மாண்டமாக நடை பெற்றது.
எல்லாமே பிசினஸ் மைண்ட்.. விஜய் சேதுபதி !
இதில் விர்ரு விர்ர்ரு பாடல் திரையிட்டு காட்டினார்கள். இதில் சிவகார்த்திகேயனின் மான்கராத்தே போஸ்டர் மாதிரி விஜய் சேதுபதியும் ஒரு போஸ் கொடுத்தி ருப்பார். 

இது இன்றைய இளம் நடிகர்கள் மட்டுமல் லாது பெரிய பெரிய ஸ்டார்கள் வரை அடடே போட வைத்தது.

நிஜமாகவே விஜய் சேதுபதி க்ரேட் தான் என்று எல்லோரும் புகழ்ந்து கொண்டிருக்க. இந்த விஷயத்துக்கு பின்னாடியும் ஒரு பிசினஸ் மைண்ட் இருக்குன்னு யாரெல்லாம் கண்டுபுடிச்சீங்க மக்களே.

ஆரம்பத்தில் அந்த காட்சியில் ரஜினி, விஜய், அஜித் என மாஸ் ஹிரோக்களின் போஸ்டர் ஏதாவது வைக்கலாம் என இயக்குனர் ரத்தினசிவா கூறும் போது, அதெல்லாம் வேண்டாம் சிவகார்த்தி கேயன் பேனர் வைங்க என்று கூறியது, 

அதற்கு ரத்தின சிவா ‘ஜீ , அவரு தான் உங்களுக்கு போட்டியா இருக்காரு... அவரை போய்... என ரத்தினசிவ தயங்கி யுள்ளார்.
என் போட்டியாளரை நான் கொண்டாடுவேன் என்று மான் கராத்தே ஸ்டைலை ஃபைனல் செய்து நடித்து விட்டார் விஜய் சேதுபதி. 

இத்தனைக்கும் சிவாகார்த்தி கேயனின் ரெமோ மற்றும் றெக்க இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ்ஸ்ஸ்..

இந்த விஷயம் சிவகார்த்தி கேயனின் காதுக்கு செல்ல ஆஹா, நம்மள கொண்டாடுறா ரேன்னு சிவாவும் சந்தோஷப் பட்டுக் கொண்டிருக்க, சிவகார்த்தி கேயனின் நெருங்கிய வட்டம்

இதன் பின்னணி உங்களுக்கு தெரியாது சிவா, விஜய் சேதுபதி நாசுக்காக உங்க ரசிகர்களை அவர் பக்கம் இழுக்க பார்க்கிறார் என்றும் கூறினார்களாம்.
ரஜினி, கமலுக்கு பிறகு ஒரு நல்ல நட்பு சினிமா வட்டாரத்தில் தெரிய ஆரம்பித்திருக்கு அதையும் ஊதி பெரிதாகி வெடிக்க வச்சிடுவாங்க போல அந்த நலம் விரும்பிகள். ஜாக்கி ரதையா இருங்க ரெண்டு பேரும்.
Tags:
Privacy and cookie settings