ஃபேஸ்புக் நிறுவனத்தின் மெசெஞ்சர் அப்ளிகேஷன் பிரிவுக்கு உத்திகள் வகுக்கும் தலைவராக தற்போது நியமிக்கப் பட்டிருக்கிறார்.
2015-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வரை ஸ்நாப்டீல் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி பொறுப்பிலும், 2014-ம் ஆண்டு தொடக்கம்
முதல் 2015-ம் ஆண்டு மே மாதம் வரை ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு அதிகாரி பொறுப்பிலும் இருந்தவர்.
உலக பொருளாதார மையத்தின் சர்வதேச இளம் தலைவர்கள் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளார்.
2013-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை யாகூ நிறுவனத்தின் ஆய்வுப் பிரிவின் மூத்த இயக்குநராகவும்,
மொபைல் தயாரிப்புகள் பிரிவின் மூத்த இயக்குநர் பொறுப்பிலும் பணியாற்றி யுள்ளார்.
ஓப்பன்வேவ் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மை பிரிவின் இயக்குநராகவும், ஏரோபிரைஸ் நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் இருந்தவர்.
கோயம்புத்தூரில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் பட்டமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் மேலாண்மை அறிவியலில் எம்.எஸ் பட்டமும் பெற்றவர்.